பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 தமிழ் நூல் தொகுப்புக் கலை என்னும் பாடல் பகுதியாலும், பிறவற்றாலும் அறியலாம். தொல்காப்பியம். அதன் உரைகள், சங்க இலக்கியங்கள், நிகண்டுகள் ஆகியவற்றின் துணைகொண்டு இதுகாறும் கூறிய விளக்கங்களால், ‘அகவல், என்பது, எந்த வகையான பாடல் என இனம் கண்டுகொள்ளலாம். மேலே இட்டுள்ள அடிப்படையுடன், வியாழ மாலை அகலல்’ என்னும் இடைச்சங்க நூலுக்கு மீண்டும் வருவோம். ஒர் ஒலைச்சுவடியில் வியாழ மாலை அகவல்’ என்னும் முழுப்பெயர் இல்லாமல், அகவல் என்னும் இறுதிப் பகுதி மட்டுமே பெயராக உள்ளது என்பதையும் ஈண்டு மீண்டும் நினைவு செய்து கொள்ளவேண்டும். ஒரு வகைப் பாவாகிய அகவல் என்னும் பெயரைக்கொண்ட இந்த நூலும், பரிபாடல், கலி என்னும் தொகை நூல்களைப் போலவே, அகவல் பாடல்களின் தொகுப்பாகிய ஒரு தொகை நூல் - அதாவதுபாவகையால் பெயர் பெற்ற தொகை நூல் என்பது புலப் படும். மற்றும், அகவல் என்றாலேயே தொகை நூலைக் குறிப் பது என்று சொல்லக்கூடிய காலம் ஒன்று இருந்தது. இதனை, சேந்தன் திவாகர நிகண்டின் ஒலிபற்றிய பெயர்த் தொகுதியி லுள்ள, ‘அகவலும் தொகையும் அசிரி யப்பாவே' என்னும் நூற்பாவாலும், பிங்கல நிகண்டின் பண்பிற் செய லின் பகுதிவகையில் உள்ள, ‘அகவலுங் தொகையும் ஆசிரி யப்பா' (323) என்னும் நூற்பாவாலும், சூடாமணி நிகண்டின் ஒலிப்பெயர்த் தொகுதியிலுள்ள, “சூட்டிய அகவல் பேர் ஆசிரியமே தொகை” (29) என்னும் பாடல் பகுதியாலும் அறிய முடிகிறது. அஃதாவது, ஆசிரியப்பா என்பதற்கு அகவல், தொகை என வேறு இரண்டு பெயர்கள் உண்டு என்பது இந் நூற்பாக்களின் கருத்தாகும். இதனால், தொகை நூல்கள், அகவல் எனப்படும் ஆசிரியப்