பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல்லில் அப்படி பிறருக்கு (ஒதுகிற, பணிக்கிற, விதிக்கிற) உரைக்கிற சொற்களில் பயனில்லாச் சொல் = உதவாத சொற்களையெல்லாம் சொல்லற்க (கட்டளை இடுவது போல) ஒதுக்கி விட வேண்டும். சொல் விளக்கம்: சொல் = கட்டளை, புத்திமொழி, மந்திரம், உறுதிமொழி, வாய்மை சொல்லுதல் உரைத்தல், ஒதுதல், பணித்தல், விதித்தல் முற்கால உரை: சொற்களில் பயனுடைய சொற்களைச் சொல்லுக. சொற்களில் பயனில்லாத சொற்களை சொல்லா தொழிக. தற்கால உரை: ஒன்றைச் சொல்ல வேண்டுமிடத்துப் பயனுடைய சொல்லையே சொல்லுக. அவ்வாறு சொல்லுதலில், பயனிலாச் சொல்லைச் சொல்லாது விடுக. புதிய உரை: பிறரிடம் பேசும் போது, இடம் பொருள் ஏவல் அறிந்து, பொருந்துகிற முறையில் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும். கேட்பவர் வாழ்வுக்கு உதவாத சொற்களைப் பேசுவதைத் தவிர்த்து விடவேண்டும். விளக்கம்: பேசுதல் என்பது கருத்துப் பரிமாற்றம் மட்டுமல்ல. கேட்பவர்கள் பயன்பெறுவது போல, பேசுவதுதான் மனிதர்க்கு அழகாகும். சிரித்துப் பேசுதல், நகைச் சுவை ததும்பப் பேசுதல், கூறியது கூறி வெறுப் பேற்றிப் பேசுதல், பரிந்து பேசுதல் என்று பேசுகின்ற முறையில் பல நிலைகள் உண்டு. ஆனால் பயனுள்ள பேச்சு என்பது கேட்பவர் விரும்பிக் கேட்பது போல, எடுத்துச் சொல்லுதல், உறுதிபடச் சொல்லுதல், விரித்துச் சொல்லுதல், அறிவுரை சொல்லுதல்; வரவேற்றுப் பேசுதல், பிரசங்கம் செய்தல் என்றும் பல வகைப்படும்.