பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை I57 111. தகுதி எனஒன்று நன்றே பகுதியாற் பாற்பட்டு ஒழுகப் பெறின் பொருள் விளக்கம்: பகுதி = மக்களிடத்தில் வேறுபாடு ஏற்பட்டு பிரிவு எழுகிறபோது பாற்பட்டார் = (முற்றும் துறந்த) துறவியரைப் போல ஒழுகப் பெறின் = முறைமையுடன் அங்கு பொருந்தி வாழ்வதே சிறந்ததாகும். தகுதி என = அறிவும் நேர்மையும் வல்லமையும் உடைய மேன்மையானது ஒன்று நன்றே - அதுவே ஒப்பற்ற மதிப்பிற்குரிய ஒழுக்கம் ஆகும். சொல் விளக்கம்: தகுதி = அறிவு, ஒழுக்கம், வல்லமை, மேன்மை, ஏற்றது. நன்றே = சுகம், இன்பம், நன்மை, அறம் ஒன்று = ஒப்பற்ற மதிப்பிற்குரிய; பாற்பட்டார் = துறவியர் பகுதி = பிரிவு, வேறுபாடு முற்கால உரை: நடுநிலைமை என்று சொல்லும் அறமே நல்லது என்பதாம். தற்கால உரை: பிறர்க்குச் செய்ய வேண்டிய கடமையினை நடுவாக நின்று செய்யின், அந் நடுவுநிலைமை ஒர் அறமாம். புதிய உரை: மக்களிடம் ஏற்படுகிற பிரிவிலும் வேறுபாடு காலத்திலும் அங்கே துறந்த துறவியர் போல நேர்மை காத்து ஒழுகுவதுதான் மதிப்பிப்பிற்குரிய ஒழுக்கம் சார்ந்த அறமாகும். அறம் என்பது ஒழுக்கமாகும். விளக்கம்: மக்கள் கூட்டம் என்றால் மாறுபாடு வரும். வேறுபாடு வரும். பிரிவு எழும். பேதங்கள் கூடும். அது போன்ற சமயத்தில். அறிவோடும் வல்லமையோடும் நேர்மையோடும் அணுகி ஒழுக்கத்தைக் காக்கும் அறனாக வாழ வேண்டும். அந்தத் தகுதியானது, மன ஒழுக்கம். உடல் ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் இவற்றால்தான் அமையும் என்பதால், அறனாகிய மனிதன் முற்றும் துறக்கும் திறனாளனாகத் திகழ வேண்டும் என்று முதல் குறளில் வள்ளுவர் கூறுகிறார்.