பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 247 181. அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது பொருள் விளக்கம்: அறங்கூறான் = ஒழுக்கமாகவும் பேசமாட்டான் அல்லசெயினும் = அல்லல் தரும் செயல்களையே செய்வான் ஒருவன் - பொறாமைக்கும், கவரும் கொடுமைக்கும் ஆளான அந்த மனிதன் புறங்கூறான் = பகைவனது இரகசியங்களை வெளிப்படுத்த மாட்டான் என்றல் இனிது - என்பதே அவனுக்கும் நன்மை அனைவருக்கும் நன்மையாம். சொல் விளக்கம்: இனிது - நன்மை, இன்பம்; அறம் = ஒழுக்கம் முற்கால உரை: அறனென்று சொல்லுவதும் செய்யாது பாவங்களை ஒருவன் செய்யுமாயின் பிறனைப் புறங்கூறான் என்று உலகத்தார் சொல்லப்படுவது நன்று. தற்கால உரை: ஒருவன் அறங்களைக் கூறாதவனாய் மறங்களைச் செய்யினும் புறங்கூறான் என்று சொல்லப்படுதல் இன்பம் பயக்கும். புதிய உரை: ஒழுக்கமில்லாமல் பேசி, இழுக்கமான காரியங்களையே செய்பவனாக இருந்தாலும், பொறாமைக்கு ஆளாகிப் போனாலும், தன்னை நம்பிப் பகைவன் கூறிய இரகசியங்களை வெளிப்படுத்தவே மாட்டான். ஏனெனில், அது அவனுக்கு மட்டுமன்று; அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதால். விளக்கம்: உலகத்திலேயே கொடுமையான பாவம் நம்பிக்கை மோசம்தான். நம்பிக்கை மோசம், உண்ணும் உணவில் நஞ்சிட்டு மாய்ப்பது போல நம்போடு இருந்த காலத்தில் மனத்தில் உள்ளதையெல்லாம் மறைத்துக் கொள்ளாமல் பேசியது நம்பிக்கையால்தான். தன் வாழ்க்கைக்காக தீயவை பேசினாலும், தில்லுமுல்லுகள் செய்தாலும், அது அவனை மட்டுமே பாதிக்கும். ஆனால் தூற்றும் வேலையையே வீரம் என்று நினைத்து, சோரம் போகும் அவனது