பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புதிய உரை: வறுமையிலும் வரும் புதியவர்களுக்கு வழங்குவது வல்லமையாகும். பலம் இல்லாத மெய்யிலும், பிறரது தீங்கைப் பொறுத்துக் கொள்ளுதல், மகளிர், மற்றும் பூமியை விட வல்லமையாளராகப் புகழப்படும். விளக்கம்: வறுமைக் காலத்தில் வந்த விருந்தினரை விரட்டுதல் யாவர்க்கும் இயல்பு. எல்லோர்க்கும் எளிது. சாதாரண மாந்தர்கள் இப்படித்தான் செய்வார்கள். அதே சமயத்தில், வறுமையிலும் வழங்கி வாழ்விக்கும் பண்பாற்றல் வல்லமையாளர்க்கே முடியும். அதுதான் பெருமைக்குரிய குணம். அதுபோல, இல்லாமை என்பது இல்லா + மெய் என்று ஆகிறது. உடலிலே சக்தி இல்லாதபோதும் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆற்றலால், மனோசக்தி நிறைந்தவராய், மற்றவர்கள் இழைக்கும் தீங்கினை மன்னிப்பதும் மறப்பதும் வல்லமையாளர்களிலும் வல்லமையாளரானவராலேயே இயலும். அப்படிப்பட்ட இல்லா மெய்யை, பொல் லாமெய்யை, வென்று, பொறைகாக்கும் பண்பே பெறுதற்கரிய நற்பண்பு என்று வள்ளுவர் 3 வது குறளில் கூறுகிறார். முதல் குறளில் மன்னிப்பு 2ஆம் குறளில் மறப்பு 3ஆவது குறளில் முடியாதபோதும் செயல்படும் சிறப்பு. 154. நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை போற்றி ஒழுகப் படும். பொருள் விளக்கம்: நிறை உடை மெய் = மன உறுதியும் ஒருமைப்பாடும் உடைய உடலானது நீங்காமை வேண்டின்- (இரண்டும்) எப்போதும் பிரியாமல் இருக்க வேண்டின் பொறையுடைமை = (மன்னித்தும். மறந்தும் முயன்று செய்கிற) பெருமை மிக்க பொறை உடைமையை போற்றி - துதித்துக காத்து ஒழுகப்படும் = வளர்த்துக் கொள்ள வேண்டும்.