பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலக மொழிகளில் நூல் தொகுப்புக் கலை 55 சில சிறப்புக்கள் பிரெஞ்சுத் தொகைநூல்களின் அமைப்பில் குறிப்பிடத்தக்க சில சிறப்புக்கள் உண்டு. பாடலின் முகப்பில் ஒரு தலைப்பு இருக்கும். பாடலின் அடியில் ஆசிரியர் பெயர், ஆண்டு, அந்தப் பாடல் அமைந்துள்ள நூற்பெயர், ஆசிரியரின் சிறு வரலாற்றுக் குறிப்பு, ஆசிரியரைப்பற்றிய பாராட்டுக்கள், அவர் பாடல் களுள் சில சிறந்த பகுதிகள், அவர் கையெழுத்து, அவரது புகைப்படம் முதலியவை இருக்கும். இவ்வளவும் எல்லாத் தொகை நூல்களிலும். எல்லாப் பாடல்களிலும் இருப்ப தில்லை. இச் சிறப்புக்களுள் ஒரு சிலவற்றை ஒரு சில தொகை நூல்களிலும். வேறு சிலவற்றை வேறுவேறு தொகை நூல் களிலுமாக மாறி மாறிக் கண்டு மகிழலாம். தனித்தனிப் பிரெஞ்சுத் தொகை நூல்களின் மாதிரிக்காக, சில தொகை நூல்களைப் பற்றிச் சிறிது சிறப்பாக ஈண்டுக் காண்போம்: 1. ANIHOLOGIE DE, LA’ POESIE LYRIQUE EN FRANCE இந்த நூலுக்கு, பிரெஞ்சு உணர்ச்சிப்பாடல் தொகை நூல்' என்னும் பொருளில் பெயர் கொடுக்கப்ட்டுள்ளது. இதனைத் தொகுத்து உருவாக்கித்தந்தவர், ழோர்ழ்துயாமெல். (Georges Duhamal) sтоarsојић зидlsђf. 1945-Зућ затц-di, இது பாரிசில் அச்சிடப்பட்டது. இதில், வில்லான் (Willon : 1413-1489) என்னும் பாவலர் முதல், பொதெலேர் (Baudelaire: 1821 - 1867) என்னும் பாவலர் ஈறாக உள்ள 113 பாவலர்களின் பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. 571 பக்கங் கள் கொண்ட இந்நூலின் முகப்பில், 35 பக்கங்கள் கொண்ட நீளமான முன்னுரை யொன்றுள்ளது. தொகுப்பாசிரியர், தமது முன்னுரையில், 'பூமாலை போன்ற தான இந்தப் பாமாலையை, மக்களின் பொழுதுபோக்குப் பசிக்காக நான் தொகுக்க வில்லை. படிப்பவர்கள், பாடல் ஆசிரியரின் உள்ளத்தோடு ஒன்றி ஈடுபட்டுப் பாட்டைச் சுவைக்க வேண்டும் என்னும் நோக்குடனேயே தொகுத்தேன். குறிப்பிட்ட ஆசிரியர்களின் பாடல்களுள் சிறந்த பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்