பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நித்திலக் கோவை 249 புலவர்கள் பாடல்கள் எண்ணிக்கை 1. பரணர் - ... 34 2. மாமூலனார் ... 27 3. மதுரை மருதனிள நாகனார் ... 23 4. கபிலர் ... 18 5. நக்கீரர் - ... 17 6. கயமனர்ர் ... 12 7. பாலை பாடிய பெருங்கடுங்கோ ... 12 8. குடவாயிற் கீரத்தனார் ... 10 9. எயினந்தை மகனார் இளங்கீரனார் ... 9 10. உலோச்சனார் - 8 மேலுள்ள அட்டவணையைக் காணுங்கால், அக நானூற் றில் மிகுதியான (34) பாடல்களைப் பாடி முதலிடம் பெற் றுள்ள தலைமைப் புலவர் பரணர் என்பது விளங்கும். நக்கீரர் தமது அங்கதப் பாட்டு ஒன்றில், - 'முரணில் பொதியில் முதல்புத்தேள் வாழி Lissour கபிலரும் வாழி- - எனப் பரணருக்கு முதன்மை தந்து வாழ்த்தியிருப்பது பொருத் தமேயாகும் கபில பரணர் - பரண கபிலர் எனப் பின்வந்த பெரியோர்களும் பரணரையும் கபிலரையும் சிறப்பித்துக் குறிப் பிட்டுள்ளனர். மாமூலனார் இருபத்தேழு பாடல்களும், மரு தனிள நாகனார் இருபத்துமூன்று பாடல்களும்பாடி, முறையே இரண்டாவது, மூன்றாவது இடங்களைப்பெற்றுள்ளனர். அகநானூற்றின் முதல் பாடலைப் பாட்யவர் மாமூலனா ராவார். நானுாறாவது பாடலின் ஆசிரியர் உலோச்சனார். இடையிலுள்ள 114, 117, 165 ஆகிய எண்கள் கொண்ட மூன்று பாடல்களின் ஆசிரியர்கள் இன்னின்னார் என அறியப்பட வில்லை. இந் நூலில் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஆசிரி யர் பெயர் அமைந்துள்ளது. - இந்த நூலின் நானுாறு பாடல்களுக்கு முன்னால், பாரதம் பாடிய பெருந்தேவனார் இயற்றிய கடவுள் வாழ்த்துப் பாடல் ஒன்று அமைக்கப் பெற்றுள்ளது. சுருங்கக் கூறின், அகநானூற் றுப் புலவர்கள் மிகவும் போற்றற்குரியர்: பாடல்கள் அனைத் தும் பெரிதும் சுவைக்கத்தக்கனவாகும்.