பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/579

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 557 திருவாமாத்துார். 1971. பாடல்கள் இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத் தமிழிலும் அமைந்துள்ளன. பாடல்கட்கு இராக தாள வரிசைகளையும் சுவாமிகளே அமைத்துள்ளார். பாடல்கள் இசையரங்கில் பாடுதற்கு உரியன. R.6828 - கீர்த்தனங்கள் கடவுளர் பலர்மீது உள்ள கீர்த்தனத் தொகுப்பு இது. கண்ணனின் குறும்பு பற்றிக் கோபியர்கள் யசோதையிடம் முறையிடுவதாக உள்ள பாடல்கள் மிகுதி, சிவன் முதலியோர் மீதுள்ள பக்திப்பாடல்கள்-உலக நீதிகள் - தத்துவக் கருத்துகள் உள்ள கீர்த்தனங்களும் உள. மயக்க நிலை நீங்கி முத்தி பெறு வதை விளக்கும் பாடல்களும் உள்ளன. |R.4868.யோகி சாத்தையர் பேரில் கர்த்தனங்கள் - ஆசிரியர் பெயர் தெரிய வில்லை. யோகி இகபரப் பொருள் பெற்றவர் - யோக சித்து வல்லவர் - பேய் ஒட்டுவதிலும் திருட்டு முத்லியன கண்டு பிடிப்பதிலும் வல்லவர் - இவை பற்றிய பாடல்கள் கீர்த்தனங்கள் உள்ளன. R , 4871, யோகி சாத்தையர் பேரில் பாடல்கள் இந்தத் தொகுப்பில் யோகி பற்றிப் பல இடங்களில் பாடப்பட்ட கீர்த்தனங்கள் உள்ளன. மற்றும் இதில், வெள்ளைச்சாமி, பெரிய நாயகி, வீரபத்திர சுவாமி ஆகியோர் மீது பாடிய பாடல்களும், இறுதி 5 ஏடுகளில் மருந்துவகை பற்றிய பாடல்களும் உள்ளன. - சரித் திரக் கீர்த்தனைகள் ஆசிரியர்: காஞ்சி-குத்தனூர் சின்னசாமி சாத்திரி. விளக்கம் (வியாக்கியானம்) உண்டு. சென்னை மனோன்மணி விலாச் அச்சுக் கூடம் 1908. பல வைணவ அடியார்கள் மீது பாடியது. அடியார்கள் வருமாறு:- - உருக்மாங்கதர், அம்பரிஷர், ததிபாண்டர், குசேலமாமுனி, பூரீ பாஷ்யகாரர், பத்ராசல ராமதாசர் ஆகியோர் மீது பாடிய கீர்த்தனைகளின் தொகுப்பு, சுபத்ரா கல்யாணச் சரித்திரக் கீர்த்தனையும் இதில் இணைக்கப்பட் டுள்ளது.