பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/645

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 623 கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பின் மாதிரிக்காக, முதலாவதாகிய திருவரங்கம் பெரிய கோயில் திருப்புகழ் தொடர்பானவற்றைக் காணலாம். சந்தக் குறிப்பு “தனதனக் தந்ததன தான தானன தனதனக் தந்ததன தான தானன தனதனங் தந்ததன தான தானன-தனதானா.' இறுதிப் பகுதி: சுவாமி திருநாமம், யூரீரங்க நாதர். தாயார் திருநாமம் பூரீரங்க நாச்சியார்.பத்து ஆழ்வார்களும் ஆண்டாளும் மங்களா சாசனம். இது காவிரியின் வடகரையில் உள்ளது. திருச்சிக் கோட்டை ஸ்டேஷனிலிருந்து. வடமேற்கு..3 மைல், மேலுள்ளவற்றை நோக்குங்கால், இந்தப் பதிப்பு பயனுள்ள ஒன்று என்பது விளங்கலாம். சாசனத் தமிழ்க்கவி சரிதம் தொகுப்பாசிரியர்: மு. இராகவையங்கார்: பதிப்பாசிரியர் மு.ரா. நாராயணையங்கார். முதல்பதிப்பு 1937. மூன்றாம் பதிப்பு 1961. -- சாசனம் என்பது கல்வெட்டு. சாசனப் பகுதி, சாசன மெய்க் கீர்த்தி, சாசனப் பாடல்கள் ஆகியவற்றின் துணை "கொண்டு உருவாக்கப்பட்டது இது.முதல் கழகக் காலம்முதல் 18 ஆம் நூற்றாண்டுவரையிலான புலவர்கள் இடம் பெற்றுள் ளனர். அதாவது, அகத்தியர் முதல் முத்துக் குமாரசாமிப் புலவர் (18.நூ.இறுதி) வரையிலான 74புலவர்களின் வரலாறு அறிய இது உதவுகிறது. இவர்கள் காலம் அறியப்பட்ட புலவர் களாம். ஆதி நாதர் முதல் வரகவிஇராமலிங்கையர் ஈறாக உள்ள புலவர்கள் ஒன்பதின்மர் காலம் தெரியாப் புலவர்கள் என்னும் தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏனைப் புலவர்கள் என்னும் தலைப்பில் சிலர் அடக்கப்பட்டுள்ளனர். மெய்க்கீர்த்தி பாடி