பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 தமிழ்நூல் தொகுப்புக் கலை ஆட்சியின்போது ஒருநாள் விண்மீன் ஒன்று விழுந்ததாம்; அதைக் கண்ட கூடலூர் கிழார், 'இத்தனையாவது நாளில் அரசன் இறந்து விடுவான்' என்று கணித்துத் தெரிந்து கொண்டு, அந்த முடிவுக்கு அஞ்சி வருந்தியிருந்தாராம். அவ்வாறே அந்த நாளில் இம் மன்னன் இறந்துவிட்டானா ம். இவனது இழப்பைப் பொறாத கூடலூர் கிழார் மிகவும் இரங்கிப் பாடிய நீளமான பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. அது, ஆடியல் அழல் குட்டத்து' என்று தொடங் கும் (229 - ஆம்) பாடலாகும். இதைக் கொண்டு இவர்களின் நெருங்கிய உறவை அறியலாம். எனவே, இந்தச் சேர மன்னனது தலைமையில் - ஆதரவில், கூடலூர் கிழார் ஐங்குறுநூறு தொகுத்தார் என்னும் செய்தி முற்றிலும் பொருத்தும். சில தொகை நூல்கள் பாண்டியரின் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டிருக்க, ஐங்குறுநூறு சேரர் மேற்பார்வையில் தொகுக்கப்பட்டிருக்கிறது. முடியுடை மூவேந்தர்க்குள் ஆட்சி யைப் பொறுத்தவரை வேறுபாடிருப்பினும், தமிழ் வளர்ச்சியைப் பொருத்தவரை வேறுபாடு இல்லை. ஒரே புலவர் முத் தரப்பு மன்னர்களையும் பற்றிப் பாடியிருப்பது காண்க. மூவேந்தர்களின் ஆதரவில்-மேற்பார்வையில் தமிழ்ச் சங்கப் புலவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். எனவே, எங்கு எவர் தலைமையில் எவரால் தொகுக்கப் படினும் அனை வர்க்கும் பொதுவே! இந்த ஒருங்கிணைந்த செயல்முறைக்குச் சான்று பகர, புறநானூற்றில் மூவேந்தர்களும் சுழல் முறையில் மாறி மாறி இடம் பெற்றிருப்பதொன்றே போதுமானதாகும். தொகையமைப்பு: பல உதிரிப் பாடல்களின் தொகுப்பு பன்மலர் மாலை” போன்றதென்றும், பல சிறு நூல்களின் திரட்டு பன் மாலைத் திரள் போன்றதென்றும் முன்பு ஒரிடத்தில் கூறப்பட்டுள்ளது. முதல் நான்கு தொகை நூல்களும் பல உதிரிப்பாடல்களின் தொகுப்பு ஆதலின், அவை பன்மலர் மாலை'யாகும். ஐங்குறு நூறு ஐந்து சிறு நூல்களின் திரட்டு ஆதலின் பன்மாலைத் திரள் ஆகும். ஐங்குறுநூற்றில் ஐந்து சிறு நூல்கள் உள்ளன. ஒவ்வொரு நூலும் ஒவ்வொரு புலவரால் ஒவ்வொரு திணை