பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 தமிழ் நூல் தொகுப்புக்கலை உள்ளுறை: இயற்கைப் பகுதி, தமிழகப் பகுதி, காதல் பகுதி: நகைச் சுவைப் பகுதி, சிறுவர் பகுதி என ஐந்து பகுதி கள் உள்ளன. அதிகாலை என்பது முதல் வழி நடத்தல்' என்பது வரை மொத்தம் 30 தலைப்புக்ள் உள்ளன. தமிழர்களைத் தட்டி எழுப்பித் தமிழ் உணர்வைப் புகட் டியவர்களுள் மிகவும் சிறந்தவர் பாரதி தாசனார், அதனால், மானமுள்ளதமிழர்கள் நெஞ்சில் என்றும் நீங்காது நிற்கின்றார் இவர். இந்த உணர்வு பெறாத தமிழர்கள் இப்போது மிகுதி யாய் இருப்பதாகத் தெரிகிறது. மீண்டும் மீண்டும் பாரதி தாசனார்கள் தோன்ற வேண்டும்போல் நிலைமை இருக்கிறது. முப்பெருங் கவிஞர்களின் படைப்புகள் 1. தேசிய விநாயகம் பிள்ளை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பாடல்கள் எளிமையும்இனிமையும் சுவையும் பொருந்தியவை. ஆற்றொழுக் காகச் செல்லும் அவர் பாடல்கள் சிறார் முதல் முதியோர் வரை சுவைத்துப் படிக்கத் தக்கவை. சில நூல்கள் வருமாறு: மலரும் மாலையும் (1) ஒருவரின் உதிரிப் பாடல்களின் தொகுப்பைத் தனி மலர் மாலை எனலாம். ஒருவரின் சிறு நூல்களில் தொகுப்பைத் "தனி மாலைத் திரள் எனலாம். இந்த இரண்டும் கலந்ததே 'ரும் மாலையும் என்னும் இந்தத் தொகுப்பாகும். ஒவ் வொரு பொருளைப் பற்றிய தனித்தனிப் பாடல்களும் இந் காலில் உள்ளன. சில சிறுசிறு நூல்களும் இத்தொகுப்பில் உள்ளன. அதனால் நூலுக்கு மலரும் மாலையும் என்னும் பெயர் வழங்கப் பெற்றுள்ளது. இதன் முதல் பதிப்பு 30-நவம்பர் - 1938. அச்சு: சாந்தி பிரஸ், சென்னை வெளியீடு: பாரி நிலையம், சென்னை உள் ளுறை: 1. பக்தி மஞ்சரி, 2. இலக்கியம், 3. சரித்திர கவிதை, 4. காட்சி இன்பம், 5. இயற்கை இன்பம், 6. மழலை மொழி, 7. உள் ளமும் உணர்வும், 8. வையமும் வாழ்வும், 9. சமூகம் 10. தேசீயம், 11. வாழ்த்து, 12. சரம கவி, 13. கதம்பம், 14. பிற்சேர்வு.