பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 தமிழ் நூல் தொகுப்புக் கலை நானூறு என்னும் நான்கு - நூல்களும் ஒரே காலத்தில் ஒரே இடத்தில் ஒரே பெரிய தலைமையைச் சேர்ந்த அறிஞர்களால் திட்டமிட்டுத் தொகுத்து உருவாக்கப்பட்டன-என்னும் கருத் துப் புலனாகலாம். இதனால், எல்லாப் பாடல்களும் ஒரே காலத்தில் பாடப்பட்டவை என்று கூறி விட முடியாது; தொகுப்பதற்கு ஆயிரம் ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்ட பாடல்களும் இருந்திருக்கலாம். பலராலும் பல காலத்தில் எழுதப்பட்ட பாடல்கள் ஒரு காலத்தில் ஒரிடத்தில் தொகுக் கப்பட்டன என்பதுதான் உண்மை, எது முதல்? மேற்கூறிய நான்கு தொகைகளுள் நெடுந்தொகை, குறுந் தொகை, நற்றிணை என்னும் அகப்பொருள் நூல்கள் மூன்றும் முதலில் ஒழுங்கு செய்யப் பட்டிருக்குமா? அல்லது புறநானூறு முதலில் ஒழுங்கு செய்யப்பட்டிருக்குமா? இந்த வினாவிற்கு விடையிறுப்பது அரிது, இருப்பினும் முயன்று பார்ப்போம்: கடைச் சங்க காலப் புலவர்களுள், அணிலாடு முன்றிலார், ஒரில் பிச்சையார், ஒர் ஏர் உழவனார், கங்குல் வெள்ளத்தார் கல்பொரு சிறுநரையார், செம்புலப் பெயனரார், தும்பிசேர் கீரனார், தேய்புரிப் பழங்கயிற்றினார், மீனெறி தூண்டிலார், விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் முதலியோர் பாடல் கள் எட்டுத் தெள்கை நூல்களில் இருப்பதைக் காணலாம். மேலே குறிப்பிட்டுள்ள புலவர்களின் பெயர்கள் இயற்கையான இடுகுறிப் பெயராய்-இயற்பெயராய் இல்லாமல், காரனப் பெயராய் இருப்பது புலப்படும். அந்தப் பெயர்களிலுள்ள முழுத்தொடரோ, அல்லது ஒரு பகுதியோ, அவரவர் பாடிய பாடலில் அமைந்திருக்கக் காணலாம். இவ்வாறாக ஏறக் குறைய முப்பதின்மர் பெயர்கள் அமைந்துள்ளன எனலாம். குறிப்பிட்ட ஒரு பாடலின் ஆசிரியர் பெயர் தெரியவில்லை யெனில், அப்பாடலில் உள்ள ஒரு சிறந்த தொடரால் கற்பனை யாக ஒரு பெயரைப் படைத்து, அதுதான் ஆசிரியர் பெயர் எனச் சூட்டுவது அக்காலத்து மரபு எனத் தெரிகிறது.எடுத் துக்காட்டாகப்-பெயர் முழுதும் பாடலில் அமைந்த புலவர் ஒருவரையும் அவர்தம் பாடல்களுடன் இவண் காண்போம்: