பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுந்தொகை 251 டிருக்கவில்லை. அப்பாடல்களின் எண்கள் வருமாறு:191,201, 256, 313, 321, 326, 375, 379, 381, 395 - என்பன வாம். இந்தப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் தெரிந் தால், ஆசிரியர் எண்ணிக்கை இன்னும் கூடுதல் ஆகலாம். ஆனால் இந்தப்பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் அழி யாதிருந்த ஒலைச் சுவடியைப் பார்த்துப் பெயர்களைக் கூட்டி இறுதியில் தொகை போட்டிருந்தால், இந்நூற்றைவர்’ எனப் போட்டிருக்க முடியாதே! ஒருவேன்ள. இந்த நூலில் பெயர் தெரிந்துள்ள புலவர்களுள் சிலரே இந்தப் பாடல்களையும் பாடியிருக்கலாமோ என்னவோ! நூலில் ஒருவர் பாடல்கள் ஒன்றுக்கு மேல் பல உள்ளன அல்லவா? பின்னர் ஒலைச்சுவடி யில் இந்தப்பத்துப் பெயர்களும் சிதைந்து விட்டிருக்கலாம். அந்தச் சுவடியைப் பார்த்தே பலரும் படி எடுத்திருக்கலாம். அல்லது, - பத்துப் பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் சிதைந்த பின்னர்,அவ்வாறு சிதைந்த ஒலைச் சுவடியைப்பார்த்துப் பெயர் தெரிந்த வரைக்கும் கூட்டிக் கொண்டு, இருநூற்றைவர், என்னும் எண்ணிக்கை தரப்பட்டிருக்கலாமோ என்னவோ? ஒலைச் சுவடியின் சிதைவாலோ, ஏடு பெயர்த்து எழுதுவோரின் தவறாலோ, புலவர்களின் பெயரமைப்புக் குழப்பத்தாலோ, எப்படியோ இந்த நிலை ஏற்பட்டுவிட்டது. பாடல் எண்ணிக்கை: அடுத்து. - இத்தொகை நாலடிச் சிற்றெல்லையாகவும் எட்டடிப் பேரெல்லையாகவும் தொகுக்கப்பட்டது. - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இந்நூலில் உள்ள 307, 391 - ஆம் எண் கொண்ட பாடல் இரண்டும் ஓர் அடி கூடுதலாக - ஒன்பது அடிகள் உடையனவாயுள்ளன. இது, நூல்தொகுத்த முறைக்கு மாறாய் உள்ளதல்லவா? மற்றும், குறுந்தொகை நானூறு, என்னும் பெயருக்கு மாறாக, இந்நூலில், கடவுள் வாழ்த்துப் பாடலைச் சேர்க்காமலேயே, ஒரு பாடல் எப்படியோ கூடுதலாகி நானுாற்றொரு பாடல்கள் இருப்பதும் "ஈண்டுக் கருதத்தக்கது. கடவுள் வாழ்த்தைச் சேர்த்தால் நானூற்றிரண்டு பாடல்கள் ஆகிவிடுகின்றன. இந்த மாறு பாட்டிற்கு, தமிழ் ஐயா உ. வே. சாமிநாத ஐயரவர்கள் நல்ல தொரு தீர்வு கண்டுள்ளார்கள். அஃதாவது,-சில ஒலைச்