பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எட்டுத் தொகை 217 'ஓர் ஏர் உழவனார்' என்னும் புலவரின் பாடல்கள் குறுந் தொகையில் ஒன்றும், புறநானூற்றில் ஒன்றும் உள்ளன. அவை வருமாறு: | குறுந்தொகை-131) 'ஆடமை புரையும் வனப்பிற் பணைத்தோட் பேரமர்க் கண்ணி யிருந்த ஆரே நெடுஞ்சே ணாரிடை யதுவே நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்து ஒர் ஏர் உழவன் போலப் - பெருவிதுப் புற்றன்றால் கோகோ யானே.” (புறநானூறு-193) 'அதளெறிந் தன்ன நெடுவெண் களரின் ஒருவ னாட்டும் புல்வாய் போல ஓடி யுய்தலுங் கூடுமன் ஒக்கல் வாழ்க்கை தட்குமா காலே.” மேலுள்ள இரு பாடல்களுள் குறுந்தொகைப் பாடலில், "ஓர் ஏர் உழவன் போல’ என ஒரே ஏரையுடைய உழவனை விதந்து பேசியிருப்பதால், அந்த ஒர் ஏர் உழவன்’ என்னும் தொடராலேயே 'ஓர் ஏர் உழவனார் ' என ஆசிரியர் பெயர் வழங்கப்பட்டுள்ளார். பெயர் முழுதும் பாடலில் அமைந்துள்ள புலவர் இவர். இப் புலவர் பெயரால் உள்ள அதளெறிந் தன்ன” என்னும் புறநானூற்றுப் பாடலில், ஒர் ஏர் உழவன் என் னும் தொடரிலுள்ள ஒரு சொல்கூட இல்லையென்பது நினை வில் வைத்திருக்கவேண்டியதாகும். அடுத்து,-தும்பி சேர் கீரனார், என்னும் புலவரின் பாடல் கள் குறுந்தொகையில் (61,315,316,320,392) ஐந்தும், நற்றிணை யில் (277) ஒன்றும், புறநானூற்றில் (249) ஒன்றும் உள்ளன அவற்றுள் குறுந்தொகைப் பாடல் ஒன்றும் நற்றிணைப் பாட லும், புறநானூற்று பாடலும் வருமாறு. (குறுந்தொகை-362) 'அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி! நன்மொழிக் கச்ச மில்லை யவர்நாட்டு o