பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/677

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 655 பள்ளி வளர்ச்சிப் பாடல்களின் தொகுப்பு இது. புது முயற்சி - அரிய முயற்சி. அறிவுக் கேள்விகள் ஆ-பிறை யணிவோன். மாணவர் பதிப்பகம், சென்னை. வி.உ. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. வ.உ.சி. அச்சகம், சென்னை உ - 177 அறிவுக் கேள்விகள் 177 பாடல்களாக உள்ளன. நூலின் இறுதியில் 177 விடைகளும் உள்ளன. பார்வைக்கு (மாதிரிக்கு) முதல் பாட்டு வருமாறு: 'குரங்கிலிருந்து பிறந்த வன்தான் குடும்பம் போற்றும் மனிதனெனப் பரங்கி மனிதன் மொழிந் திட்டான் - பகர்ந்த பரங்கி யார் சொல்வீர்?" பாடல்-1. விடை - 1. சார்லஸ் டார்வின். இந்தத் தொகுப்பு பொது அறிவை வளர்க்கும் ஓர் அரிய புதிய முயற்சி யாகும். நைவேத்தியம் ஆ - இரவீந்திரநாத் தாகூர், மொழி பெயர்ப்பு - ஆ.கந்தசாமி. இது 100 பாடல்கள் கொண்டது.முதல் 50 பாடல் களை முதல் பாகம் எனவும்,அடுத்த 50பாடல்களை இரண்டாம் பாகம் எனவும் பகுத்துள்ளனர். முதல் பாகம் 'பக்தி பற்றியது. இரண்டாம் பாகம் தேசியம் பற்றியது. வெ-ஸ்டார் பிரசுரம், சென்னை. சதானந்த அச்சகம், விருது நகர். 1957. வரம் தரும் அன்னை ஆ-ர. அய்யாசாமி. ஜ்வாலா கலை மன்றம், சென்னை, சாந்தி பிரஸ். 1966. வேளாங்கண்ணி அன்னை (மாதா)பற்றிய இசைப்பாடல்களின் தொகுப்பு. அஞ்சலி முதல் நன்றி வரை பல தலைப்புகளில் பாடல்கள் உள. இராம கிருஷ்ண பரம ஹம்சர் இன் கதைக் கவிதை - தமிழ் ஆக்கம்-ரெ. இராமமூர்த்தி - கொப்பனாம்ப்ட்டி, கமர்சியல் பிரின்டிங் & பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை. 1963.