பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் - 145 ஒவ்வொருவரால் ஒவ்வொரு படலம் வீதமாக இந்தப் பன்னிரண்டு படலங்களும் இயற்றப்பட்டன என்னும் கருத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு, பன்னிருவருள் முதல் வராகிய தொல்காப்பியரால் பன்னிரு பாடலங்களுள் முதலாவ் தாகிய வெட்சிப் படலம் இயற்றப்பட்டது என்னும் கருத்துப் பரவலாகச் சொல்லப்பட்டு வருகிறது. -, த்ொல்காப்பியர் இல்லை ஆனால், தொல்காப்பிய உரையாசிரியர்களாகிய இளம் பூரணரும் நச்சினார்க்கினியரும், இலக்கண விளக்க நூல்-உரை ஆசிரியராகிய வைத்திய நாதப்புலவரும், பன்னிரு படலத்தின் முதல் படலமாகிய வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியர் இயற்றினார் என்னும் கருத்தைக் காரணங் காட்டி வன்மை யாக மறுத்துள்ளனர். பன்னிரு படலத்தின் தலையெழுத்தைத் தீர்மானிப்பதற்கு இவர்தம் மறுப்புரைகளை நாம் ஊன்றி நோக்க வேண்டும். முறையே அவை வருமாறு: இளம்பூரணர், தொல்காப்பியப் புறத்திணை இயல் முதல் நூற்பாவிற்கு முன்னால், 'புறத்திணை இயல் என்னும் தலைப்பிற்கு விளக்கமாகத் தாம் எழுதியுள்ள, . 'ஆன்ற சிறப்பின் அறம் பொருள் இன்பமென மூன்றுவகை நுதலியது உலகம் அவற்றுள் அறமும் இன்பமும் அகலா தாகிப் புறன் எனப் படுவது பொருள் குறித் தன்றே” என்னும் பன்னிரு படலச் செய்யுளுள் புறப்பொருள் அறமும் இன்பமும் அகலாதாகி எனக் கூறினார்; அவர் கூறுதல் வாகைத்திணைக்கண் கட்டில் நீத்த பால் முதலாகக் காமம் நீத்த பால் ஈறாக அறங்கூறுதலின் அச்சார்பாகக் கூறியது மயங்கக் கூறுதலாம். "ஆங்ங்ணம் உரைப்பின் அவற்றது வகையால் பாங்குறக் கிளந்தனர் என்ப அவைதாம் வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி அட்குவரு சிறப்பின் உழிஞை நொச்சி அரண்மிகு சிறப்பின் தும்பையுள் ளிட்ட