பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பன்னிருபடலம் 167 தொல்காப்பியம் பன்னிரு படலம் என்னும் இரு நூல்களையும் தழுவிச் சென்றுள்ளார் எனக் கூறலாம். இதனால், தொல்காப் பியத்திற்கும் பன்னிரு படலத்திற்கும் நடுவே, உள்ள இடை வெளி மிகவும் சுருங்கியது என்பது புலப்படும். இவ்வாறாக, இளம்பூரணர் முதலியோர் கூறும் மறுப்புரை களுக்கு இன்னும் பதில் மறுப்புரைகள் பல கூறி, பன்னிருபடல தின் வெட்சிப் படலத்தைத் தொல்காப்பியரே இயற்றினார் என்ற சிவஞான முனிவர் போன்றோர் கொள்கையை உறுதி செய்யலாம். இதுகாறுங் கூறியவற்றால், ஐயனாரிதனார் தமது புறப் பொருள் வெண்பா மாலையின் சிறப்புப் பாயிரச் செய்யுளில் கூறியுள்ளாங்கு, தொல்காப்பியர் முதலிய புலவர்கள் பன்னிரு வர் சேர்ந்து இயற்றிய ஒரு தெகுப்பு நூல் - ஒரு தொகை நூல் பன்னிரு படலம் என்பது வெளிப்படை. நூல் அமைப்பு: இனிப் பன்னிரு படல நூல் அமைப்பினைப் பற்றி ஆராய் வாம். தொல்காப்பியத்தில் எழுத்ததிகாரம். சொல்லதிகாரம் பொருளதிகாரம் என்னும் மூன்று பெரும் பிரிவுகள் உள்ளன; ஒவ்வொன்றிலும் இயல்' என்னும் பெயரில் ஒன்பது ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன; கம்பராமாயணத்தில் பெரும் பிரிவுக ளாக ஆறு காண்டங்கள் உள்ளன, ஒவ்வொரு காண்டத்திலும் உட்பிரிவுகளாகப் பல படலங்கள் உள்ளன. இந்த இரு நூல்களை யும் போன்றதன்று பன்னிரு படலம். இதில் பெரும்பிரிவு உட் என இரு வேறு வகை இல்லை. புறப்பொருள் வெண்பா மாலையைப் போல, படலம் என்னும் பெயரில் பன்னிரண்டு வெற்றுப் பிரிவுகளை யுடையது இது. இதனை, தொல்காப் பியம் செய்யுளியலில் உள்ள, 'மூன்றுறுப் படக்கிய தன்மைத் தாயின் தோன்றுமொழிப் புலவர் அது பிண்டம் என்ப" என்னும் (165) நூற்பாவின்கீழ் இளம்பூரணர் எழுதியுள்ள, அவற்றுள் சூத்திரத்தால் பிண்டமாயிற்று இறையனார் களவியல், ஒத்தினால் பிண்டமாயிற்று பன்னிரு படலம்; அதி