பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 தமிழ் நூல் தொகுப்புக் கலை தன்னில்(ன) - என்பனவாம். வ, ற என்னும் இரண்டெழுத்து கட்கு மட்டும் பாடல் இல்லை. யான் படித்துப் பார்த்த இரண்டு பதிப்புகளில், "ல" என் னும் எழுத்துக்காக உள்ள இலங்கை மன்னனை' என்று தொடங்கும் பாடல், முப்பதாம் பாடலாகத் தரப்பட்டுள்ளது. இதனை, 'ர' என்னும் எழுத்துகாக்க உள்ள அரவ' என்று தொடங்கும் பாடலுக்கு அடுத்தாற்போல் அமைக்கவேண்டும்அதாவது - இருபத்தேழாவது பாடலாக அமைத்திருக்க வேண் டும். ஆனால், நாவுக்கரசர் ஒவ்வொரு பதிகத்தின் இறுதிப்பாட் டிலும், கயிலையை எடுத்த இராவணனைச் சிவன் அடக்கி ஆட்கொண்டதைக் கூறியுள்ளார் ஆதலாலும், இலங்கை மன் னன்’ என்று தொடங்கும் பாடலிலும் இச் செய்தி கூறப்பட் டிருத்தலாலும், இந்தப் பாடல் முப்பதாம் பாடலாக - அதா வது - இறுதிப் பாடலாக அமைக்கப்பட்டுள்ளது. 'ல எழுத் துக்கு உரிய பாடல் இறுதியில் இருப்பதாக எண்ணி அமைதி கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. - நாவுக்கரசர் ஒவ்வொரு படலத்தின் இறுதியிலும் இராவ ணனைச் சிவன் ஆட்கொண்டதைக் குறிப்பிட்டிருப்பதற்குச் சேக்கிழார் தமது பெரிய புராண நூலில் ஒரு பொருத்தம் கூறி யுள்ளார். அதாவது: இராவணன் முதலில் சிவனுக்கு எதிராக நடந்து கொண்டு கயிலையைத் தூக்கினான். பின் சிவன் அவனைக் காலால் அமுக்கியதும், அவன் அஞ்சிச் சிவன்மேல் பாடினான்; உடனே சிவன் அவனுக்கு இரங்கி அருள் செய்தார். அதுபோல, நாவுக் கரசர் முதலில் சமணமதம் புக்குச் சைவத்திற்கு எதிராகச்செயல் பட்டார். பின்னர் மீண்டும் சைவத்திற்கு வந்து சிவனைப் பாடி அருள் பெற்றார். இதனைக் குறிப்பிடுவதுபோல், ஒவ் வொரு பதிகத்தின் இறுதியிலும் இராவணன் வரலாற்றைக் கூறலானார் - என்பதாகச் சேக்கிழார் கற்பனை செய்துள் ளார் : பாடல்: