பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 தமிழ்நூல் தொகுப்புக் கலை மாலை, பண்டார மும்மணிக்கோவை, காசிக் கலம்பகம், சகலகலா வல்லிமாலை - ஆக மொத்தம் 14 நூல்கள். குமர குருபரர் செய்யவில்லை எனச் சிலர் கூறும் மீனாட்சி யம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணிமாலை, சிவகாமியம்மை இரட்டை மணி மாலை ஆகிய மூன்று நூல் களும் இப்பதிப்பில் உள்ளமை காண்க. குமரகுருபர சுவாமிகள் திருவருட்பா ஆசிரியர் - குமர குருபரர். தொகுப்பு - வி. சுந்தர முதலி யார். விக்டோரியா ஜுபிலி அச்சுக்கூடம், சென்னை. 1890. நூல்கள்: காசி துண்டிராச திருவருட்பா, காசி கதிர்காம வேலவர் திருவருட்பா, காசி விசுவநாதர் திருவருட்பா, காசி கேதார கெளரி திருவருட்பா ஆகியவை. குமர குருபரர் காசியில் மடம் அமைத்துத் தங்கியிருந்த வர் ஆதலின், காசி தொடர்பான இந்நூல்களை இயற்றி யுள்ளார். திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் தோத்திரப் பிரபந்தத் திரட்டு வெளியீடு ஊ. புஷ்பரதச் செட்டி அண்டு கம்பெனி. கலா ரத்நாகரம் அச்சுக்கூடம், சென்னை - 1897, சிதம்பர சுவாமிகள் இயற்றிய நூல்களாவன: மீனாட்சி கலி வெண்பா, வேதகிரீசுரர் பதிகம், குமார தேவர் நெஞ்சுவிடுதூது, குமாரதேவர் பதிகம், பஞ்சதிகார விளக்கம் - ஆகியவை. - சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகன்மீது மட்டும் பாடிய நூல்கள் திருப்போரூர்ச் சந்நிதிமுறை என்னும் தலைப் பின்கீழ்த் தொகுத்துத் தரப்பெற்றுள்ளன. பாம்பன் குமர குருதாசரின் திரட்டு பாம்பன் குமர குருதாச சுவாமிகள் பாம்பனில் 1850 ஆம் ஆண்டு பிறந்தார். பிரப்பன்வலசை என்னும் ஊரில் நில அறை யில் 35 நாட்கள் தங்கித் தவம் செய்தார். 30-5-1929 ஆம் நாள் திருவான்மியூரில் இறுதி எய்தினார். இவரது திரட்டு