பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/344

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 தமிழ்நூல் தொகுப்பு கலை கடிமிளைக் குண்டு கிடங்கின் மீப்புடை யாரரண் காப்புடைங் தேஎ நெஞ்சுபுக லழிந்து கிலைதளர் பொரீஇ யொல்லா மன்னர் நடுங்க நல்ல மன்றவிவண் வீங்கிய செலவே. என வரும்.’’ மேலே நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டியுள்ள பாடல் பதிற்றுப் பத்துப் பாடலாகும். அவர் இங்கே நூல் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் அவரே, தொல்காப்பியம் - புறத் திணையியலில் உள்ள பாடாண் பகுதி கைக்கிளைப் புறனே என்னும் (25-ஆம்) நூற்பாவின் உரையிடையே, "இலங்கு தொடி மருப்பின் என்னும் பதிற்றுப் பத்து உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பாகிய உழிஞை யாயி லும், பதின்றுல்ாம் பொன் பரிசில் பெற்றமையிற் பாடானா யிற்று."என, இலங்கு தொடி மருப்பின் என்று தொடங்கும் இப் பாடலைப் பதிற்றுப்பத்துப் பாடல் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல், கிடைத்துள்ள எண்பது பாடல்களுள் இல்லாமை யால், இது முதல்பத்து அல்லது பத்தாம் பத்தைச் சேர்ந்த தாக இருக்கவேண்டும். அடுத்து,-தொல்காப்பியம்-கற்பியலில் தற்புகழ் கிளவி எனத் தொடங்கும் (39-ஆம்) நூற்பாவின் உரையிறுதியில், "தலைவன் முன்னர் இல்லையெனவே அவன் முன்னரல் லாத விடத்துப் புகழ்தல் பெற்றாம். அவை காமக் கிழத்தி யரும் அவர்க்குப் பாங்காயினாருங் கேட்பப் புகழ்தலாம். பேணுதகு சிறப்பிற் பெண்ணியல் பாயினும் என்னோடு புரையுருள் அல்லள் தன்னொடு புரையுநர்த் தானறி குகளே’ எனப் பதிற்றுப் பத்தில் வந்தது."-- என நச்சினார்க்கினியர் வரைந்திருப்பதிலிருந்து, மேலே அவரால் காட்டப்பட்டுள்ள மூன்று அடிகளும், பதிற்றுப் பத்துப்