பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்கு காலம் 703 நெஞ்சு விடு தூது, தாலாட்டு, பிள்ளைத் தமிழ், கலம்பகம், பள்ளி யெழுச்சி ஆகிய ஐந்து நூல்களை ஒரு திரட்டாக வெளி யிட்டுள்ளார். மற்றும் இரு பதிப்புகள் சென்னை சைவ சிந்தாத்த நூற்பதிப்புக் கழகத்தாரும், சிவப்பிரகாச ನ್ಡ பிரபந்தத் திரட்டு என்னும் பெயரில் இரு முறை வ்ெளியிட்டுள்ளார்கள். சிவப்பிரகாசர் செந்தமிழ் நூல்கள் இப் பெயரில் மயிலம் 18 ஆம் பட்டத்து அருள்திரு சிவ ஞான பாலைய சுவாமிகள் வெளியிட்டார்கள். அச்சு : சண்முகா அச்சுக் கூடம், திருப்பாதிரிப் புலியூர். சுபானு ஆண்டு 1944. - இந்தப் பதிப்பில், 34 நூல்கள் இடம்பெற்றுள்ளன. சதமணி மாலை, சிவப்பிரகாச விகாசம் என்னும் இரண்டு நூல்களை யும், முது பெரும்புலவர் திரு அடிகளாசிரியர் அரிதின் முயன்று தேடிக் கண்டு பிடித்து மயிலம் மடத்து வெளியீடாக வரச் செய்தார். இவ்விரண்டும் இந்தத் திரட்டில் உள்ளன. சிவப்பிரகாசர் தம் செய்யுள் வளத்தால் கற்பனைக் களஞ்சியம்' என்னும் சிறப்புப் பெயர் பெற்றவ ராதலின், அவருடைய சிறந்த நூல்களின் பெயர்களையாவது இவண் காண்பாம்: சோன சைல மாலை, திருச் செந்தில் அந்தாதி, திருவெங்கைக் கோவை, திரு வெங்கைக் கலம்பகம். திரு வெங்கை உலா, திரு வெங்கை அலங்காரம், சிவப்பிரகாச விகாசம், தருக்க பரிபாஷை, நால்வர் நான் மணி மாலை சதமணி மாலை, சிவஞான பாலய சுவாமிகள் நெஞ்சுவிடு தூது, சிவஞான பாலய சுவாமிகள் தாலாட்டு, சிவஞான பாலய சுவாமிகள் பிள்ளைத் தமிழ், சிவஞான பாலய சுவாமி கள் கலம்பகம், சிவஞான பாலய சுவாமிகள் திருப்பள்ளி யெழுச்சி, கூவப் புராணம், பிரபுலிங்க லீலை, வேதாந்த சூடா மணி, சித்தாந்த சிகாமணி, பழமலை அந்தாதி, பிட்சாடன நவ மணி மாலை, பெரிய நாயகியம்மை கட்டளைக் கலித்துறை, பெரிய நாயகியம்மை நெடுவிருத்தம், இயேசு