பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/773

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6-2. பிற்சேர்க்கை-2 நற்றிணைச் சிக்கல் மற்றும் ஒரு சிக்கல் நற்றிணை தொடர்பாக உள்ளது. நற்றிணையில் போதனார் என்னும் புலவர் இயற்றியதாக உள்ள-பாலைத் திணைக்கு உரிய பிரசம் கலந்த' என்று தொடங்கும் 110 ஆம் பாடலில் 13 அடிகள் உள்ளன. நற் றிணைப் பாடல்களின் உயர் எல்லை 12 அடிகளே. 13 அடி களும் இன்னும் மிகுதியான அடிகளும் கொண்ட பாடல்கள் நெடுந்தொகையாம் அகநானூற்றுக்கு உரியன. இந்தப் பாடலை அகநானூற்றில் சேர்க்கவும் வழியில்லை. ஏனெனில், அகநானூற்றில் உள்ள நானூறு பாடல்களும் 13 அடிகட்குக் குறையாமல் உள்ளன. ஏதேனும் ஒன்றாயினும் 13 அடிக்குக் குறைந்திருந்தால், அதை நீக்கிவிட்டு இந்த 13 அடிகள் கொண்ட நற்றிணைப் பாடலை அகநானூற்றில் சேர்க்கலாம். ஆன்ால் அதற்கு வழியில்லையே! இந்தச் சிக்கலுக்குத் தீர்வு யாது? 13 அடிப் பாடல் ஒன்று நற்றிணையில் இருப்பதற்குப் பின்வருமாறு எவையேனும் நொண்டிக் காரணங்கள் கூறலாம். அவற்றையுந்தாம் பார்ப் போம்ே: ஒன்று:- அந்தக் காலத்தில் பாடல்கள் ஒலைச் சுவடியில் இருந்ததால், ஒரளவு தேய்ந்தும் இருக்கலாம். எனவே, அடி எண்ணியவர்கள், கவனக் குறைவாகப் பதின்மூன்று அடிகளைப் . பன்னிரண்டு அடிகளாக எண்ணிவிட்டிருக்கலாம். ஒரு பாடலா? இரு பாடல்களா? நானுாறு பாடல்களின் அடிகளை எண்ணும்போது இப்படியொரு தவறு நேர்ந்திருப்பதில் அப்படி யாகப் பெரிய வியப்பு ஒன்றும் இல்லை. இந்த அடிப்படையில் இந்தப் பாடல் நற்றிணையில் சேர்ந்திருக்கலாம். இரண்டு:- நெடுந்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றிலும் சமஅளவாக நானுாறு பாடல்கள் அமைப்பது என்ற திட்டத்தின் கீழ்ச் செயல்பட்டபோது, ஒன்பது அடி கட்குக் குறையாமலும் பன்னிரண்டு அடிகட்கு மேற்படாமலும் உள்ள பாடல்கள் 399 மட்டுமே கிடைத்திருக்கலாம். எனவே, நற்றிணையை நானுாறாக நிரப்ப, இந்த 13 அடிப்பாடலைத்