பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் காத்து = தான் பேசுகின்ற வார்த்தைகளில் உறுதியையும் ஒழுக்கத்தையும் காத்து * சோர்விலாள் - இவற்றில் நிலை குலையாமல் தினம் வாழ்கிறவளே பெண் = அறனுக்கு ஏற்ற பெண்ணாவாள் சொல் விளக்கம்: s தற்கொண்டான் - தனக்குரியவனான அறன் தண்சான்ற - அருள், அன்பு, மேன்மையைக்காக்கும். முற்கால உரை: கற்பையும் கணவனையும் நற்குண நற்செய்கைகளையும் காப்பாற்றுபவளே மனையாள் என்பதாம். தற்கால உரை: கற்பினில் சிறந்து நின்று, தன்னையும் காத்துக் கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றித் தன் புகழையும் காத்து வருபவளே போற்றத்தக்க மனைவியாவாள். புதிய உரை: இல்லம் காக்கும் ஏற்றமிகு பெண்ணுக்குரிய மூன்று குணங்கள் திண்மையான உடல், நுண்மையான மனம், உண்மையான சொற்கள். இவற்றால் தன்னையும் காத்து, தனக்குரியவரையும் காப்பாற்றுபவளே பெண் ஆவாள். விளக்கம்: 54ஆம் குறளில் உடல் திண்மை. 55 ஆம் குறளில் மனநுண்மை 56 ஆம் குறளில் சொல் உண்மை. நல்ல உடல் - நல்ல மனம் இதில் நல்ல மொழிகளும் நல்ல வாழ்வும் தோன்றும் என்னும் உலக உண்மையை, வள்ளுவர் மிகச் சாதுரியமாக விளக்கியிருக்கிறார். வலிமையான உடளில் தான் வலிமையான மனமும் வளமான சொற்களும் பிறக்கும். பெருமையைச் சேர்க்கும். 57. சிறைகாக்கும் காப்பு எவன்செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை பொருள் விளக்கம்: சிறை = கட்டுப்பாடும், மதில்காவல் போன்றவையும் காக்கும் காப்பு = கட்டுக்காவலுடன் காக்கின்ற காவல் எவன் செய்யும் - எதுவுமே செய்து காத்துவிட முடியாது மகளிர் = அறனின் மனைவியாகின்ற பெண்ணின்