பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வரவேண்டும். அதனால்தான் தெரிவான் கண்ணே உலகு என்றார். அதாவது தெரிந்தவனது உடம்பு தான், உ லகமாகிவிடுகிறது என்பது வள்ளுவர் உள்ளம். ஐம்புலன்களின் ஏதுவை, கூறுபாட்டை, காரண காரியப் பண்புகளைத் தெரிந்து காப்பவனது தேகம், உலக வாழ்வியலை உயர்வுற நடத்த உதவுகிறது. இப்பாடலால் ஐம்புலன்களின் நுண்மையின் உண்மையைப் புரிந்தவரது தேகத்தின் சிறப்பு, தெளிவாக்கப் பட்டிருக்கிறது. 28. நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும் பொருள் விளக்கம்: நிறைமொழி - சக்தி வாய்ந்த பயன் தவறாத வாக்கின் மூலம் மாந்தர் = வழங்குகின்ற மேன்மையாளர்களின் பெருமை = வல்லமை மிகுந்த சீர்மையானது நிலத்து = பூவுலகில் வாழும் மக்களுக்கு மறைமொழி - (நல்ல உடல், நல்ல மனம், நல்ல வாழ்வு) ஞானம் நிறைந்த சொற்கள் மூலமாக காட்டி விடும் = உயர்வாழ்வில் வழிப்படுத்தி விடும். சொல் விளக்கம்: நிறை = அழிவின்மை, அறிவு, வலிமை நிறைமொழி - சக்தி வாய்ந்த சொல், பயன் தவறாத வாக்கு மறை = வேதம், அறிவு, ஞானம் மறைமொழி - நல்ல வாழ்க்கைக்குரிய நலமான மந்திரம், மந்திரம் என்பது நல்லதையே திரும்பத் திரும்ப நினைக்கும் தந்திரம். முற்கால உரை: நிறைந்த மொழியினை உடைய துறந்தாாது பெருமையை நிலவுலகின் கண் அவராணைக்குச் சொல்லிய மந்திரங்களே கண் கூடாகக் காட்டும். தற்கால உரை: சொல்லியது சொல்லியவாறே நிறைவேறும் சொற்களைச் சொல்லும் நீத்தார் பெருமையை, இவ்வுலகைக் கட்டிக்காக்கும் அவர்தம் பாதுகாப்பு மொழிகளே காண்பித்துவிடும்.