பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 225 ஒன்னார் = பகைவரைப் போல கேடு = (அவரை) தீமையால் ஈன் - பது + இவ்வுலகில் பின்னே நின்று அழித்துவிடும். சொல் விளக்கம்: வழுக்கு = மறதி; சாலுதல் = நிறைதல், மிகுதியாதல் ஒன்னார் =பகைவர்; ஈன் - இவ்வுலகம், இவ்விடம் பதுக்கம் = பின் நிற்கும். முற்கால உரை: பொறாமை பகைவரை யொழிந்தும் கேடு பயப்பதால், அவ் வழுக்காறுடையார்க்குப் பகைவர் வேண்டா. அதுதானே அமையும். தற்கால உரை: பகைவர் தவறினாலும் துன்பம் தருவது பொறாமை. எனவே, பொறாமையை அழிக்க அதுவே போதும். புதிய உரை: பொறாமை உடையோர்க்கு, அது குறையாமல் மிகுதியாகிக் கொண்டே தான் போகும். அந்தப் பொறாமையை அவர் மறந்திருந்தாலும் கூட, பகைவரைப் போல பின்னிருந்து, அவருக்குக் கேடு விளைவித்து அழித்து விடும். விளக்கம்: பொறாமை என்பது மனத்துக்குள் விதைக்காமலே முளைத்த விஷச் செடி போன்றது. அது எவ்வித ஊட்டமும் இன்றி, வளர்ந்து கொண்டேதான் போகும். அழிப்பாரிலாமல் செழிப்புடன் வளரும் நச்சுச் செடி போல, பொறாமையும் வளர்ந்து கொண்டே வரும். அந்தப் பொறாமையை அவர் மறந்தாலும் பதுங்கியிருந்து பாய்ந்து அழிக்கிற பகைவரைப் போல, அந்தப் பொறாமை, அவருடனேயேயிருந்து அழித்து விடும் ஆற்றல் கொண்டது. நினைத்திருந்தாலும் துன்பம் தரும். மறந்திருந்தாலும் தொடர்ந்து துன்பம் தரும் ஆற்றல் கொண்டது பொறாமை என்பதை துல்லியமாக விளக்குகிறார் வள்ளுவர் இந்த 5 ஆம் குறளில்.