பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தெருளாதான் என்கிறபோது, அவன் அறிவிலியாகிறான். தெருள் ஆதன் என்கிறபோது. அவன் ஞானத்தால் உயிரைப்பற்றி அறிந்தவனாகிறான். அப்படி அறிந்து உடலின் மெய்யான நிலையை மேலும் மேலும் அறிந்து கொள்கிறபோது, அவன் அருள் மிகுந்த ஆத்மாவைப் பற்றி, ஆழமாக அறிந்து கொள்கிறான். ஆத்மாவைக் காக்க என்ன வழி என்று அறிகிறபோது அவன் அறம் தான் ஆன்ற வழி என்று செய்கிறான் என்பதைத்தான் வள்ளுவர் செய்யும் அறம் என்றார். அறம் என்பது ஒழுக்கம். ஒழுக்கம் செய்து, உயிரைக்காக்கும் உத்தம ஞானவான் ஆகிறான். தெருளாதான், அருளாதான் என்ற சொற்களுக்குப் பதிலாக, நான் தெருளாதன, அருளாதான் என்று பொருள் கொண்டிருக்கிறேன். தெருளாளன் ஞானத்தோடு உடல் பற்றி அறிந்தாலும், அறிவே இல்லாதவன் உடல் பற்றி நன்கு அறிந்தாலும் அது ஒன்று தானே. அதை உறுதிப்படுத்தவே தேரின் என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார். மேலும் அறிவில் தெளிவு பெறுகிற போது ஞானம் வருகிறது. ஞானம் தான் ஆத்மாவை அறிகிறது. காக்க உதவுகிறது. வாழ்வில் உயர்வாக்குகிறது என 9 ஆம் குறளில் கூறுகிறார். 250. வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து. பொருள் விளக்கம்: வலியார்முன் (தன்னைவிட) வலிமையானவர்கள் முன்பாகவும் தன்னின் மெலியார் = தன்னைவிட எளியார்கள் முன்பாகவும் மேல் செல்லுமிடத்து - (யாராக இருந்தாலும் அவர்களுடன்) உடலை பற்றுடன் உறவாடும்போது தன் தன்னுடைய ஆத்மா போன்றவர்கள் என்று நினைக்க = நினைப்பதே அருளுடைமையாகும். சொல் விளக்கம்: வலியார் = வலிமையானவர்கள்; தன் - ஆன்மா, ஆத்மா செல்லும் பற்றுடன்.