பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O2 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: . பிறன் மனையாளைக் காதலியாதவன், அறநெறியில் இல்வாழ்க்கையை நடாத்துபவன். புதிய உரை: அயலான் ஒழுக்க நெறிக்குத் துணை நிற்கும் பெண்மையை விரும்பாத தவத்தன்மையன் தான், இல்லற நெறி காக்கும் அறன் என்று பெருமைப்படுத்தப்படுகிறான். விளக்கம்: ஆளும் தன்மையை ஆண்மை என்றனர். பேணிக்காக்கும் தன்மையைப் பெண்மை என்றனர். இயல்பான ஒழுக்கம் காக்கிற அயலானவன் துணையானவளை, இச்சிக்கின்ற எண்ணமே இல்லாதவன் தான் உயர்ந்த நாயகன். அவனே தவ வலிமை கொண்ட கற்பு நாயகன். அவனே தவன் ஆகிறான். அவனே இல்லற நெறி காக்கும் ஒழுக்க சீலன். அவனே வீட்டு நெறி வளர்க்கும் வேதத் தன்மை மிக்கவன். அதனால்தான் இல்வாழ்வான் என்பான் என்றார் வள்ளுவர். பிறன் பெண்மை நயப்பது பெருந் தீங்கு. நயவாதிருப்பது நற்பண்பு. அதுவே உலகம் காக்கும் உயர் பண்பு என்று 7 வது குறளில் பிறனில் விழையாமையின் பெருமையை விளக்குகிறார். 148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு அறன்அன்றோ ஆன்ற ஒழுக்கு பொருள் விளக்கம்: சான்றோர்க்கு அறிவு ஒழுக்கங்களால் சிறந்தவர்க்கு பிறன்மனை - மற்றவரது வீட்டைப் பற்றிய நோக்காத - மனம் செலுத்தாமல் வாழ்கிற பேராண்மை = அரிய செயலார்ந்த வீரமானதும் ஆன்ற ஒழுக்கு = மாட்சிமை மிக்கபடி ஒழுகுதலும் அறனன்றோ = அறம் காக்கும் பெரியவனாக ஆக்குகிறது. சொல் விளக்கம்: நோக்காது = மனம் செலுத்தாத, பேராண்மை - அரிய சொல் ஆன்ற மாட்சிமைமிக்க; ஒழுக்கு நன்னடை முற்கால உரை: பிறன் மனைவியை இச்சியாமை பெரியோருக்குத் தருமம் ஆகும்.