பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 345. மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கும் உற்றார்க்கு உடம்பும் மிகை. பொருள் விளக்கம்: மற்றும் = பிறதீய வினைகளோடு தொடர்பாடு = காம நுகர்ச்சியும் எவன்கொல் = (சேர்ந்தால்) அவன் அழிவை யார் குறுக்குத் தாழ்போட்டுத் தடுக்க முடியும்? பிறப்பு = உண்டாகின்ற மிகை = காமக் கோட்டினை உற்றார்க்கு = துறக்க முயற்சிக்கிறவனுக்கு உடம்பும் - உடம்புதான் அறுக்கும் - இல்லாமல் அழித்துக் காக்கும் சொல் விளக்கம்: மற்று = பிறதீவினை; தொடர்பாடு = காம நிகழ்ச்சி கொல் = குறுக்குத்தாழ்; பிறப்பு = உண்டாக்குதல் அறுக்கல் = இல்லாமல் செய்தல்; மிகை = கேடு, குற்றம் முற்கால உரை: பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு, அதற்குக் கருவியாகிற உடம்பும் மிகையாம். ஆனபின், அதற்குமேலே இயைபில்லனவும் சில தொடர்பாடு உளவாதல் என்னாம். தற்கால உரை: தீமையின் தோற்றங்களை நீக்க முயலுகின்றவர்களுக்கு, உடம்பே மிகையானதொரு பொருளாக இருக்க, அதற்மேல் வேறு பொருள்களோடு தொடர்பு கொள்ள வேண்டிய இன்றியமையாமை அவர்களுக்கு என்ன இருக்கிறது? ஒன்றுமில்லை. புதிய உரை: பிற தீவினைகளோடு, காமநுகர்ச்சியிலும் ஈடுபடுகிற ஒருவனது அழிவை, யாரால் தடுக்க முடியும் அந்தக் காம நுகர்ச்சியின் கேட்டைத் தடுக்க முயலுகிறவனுக்கு, அவன் உடம்பே உறுதிபட இருந்து உதவும். விளக்கம்: மனதுக்கு மயக்கத்தையும், ஆன்மாவுக்குக் சிறக்கத்தையும், உடலுக்குக் கலக்கத்தையும் உண்டு பண்ணுகிற தீவினைகளை அழிக்க, யாதொன்றின் மீதும் பற்றின்மை வேண்டு மென்று நான்காவது குறளில் வள்ளுவர் கூறினார்.