பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: குடம்பை நீர்நிலை; புள் - நீர்ப் பறவை பறந்தது - அவசரப்படுதல், விரைவாய் ஒடல் நட்பு = தொடர்பு, ஒழிய நீங்க முற்கால உரை: முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்பதனால் இருந்த புள், பருவம் வந்துழி பறந்து போன தன்மைத்து, உடம்பிற்கும். உயிர்க்கும் உளதாய நட்பு. தற்கால உரை: உடம்போடு உயிருக்கு இருக்கும் உறவானது, தான் வாழ்ந்த கூடு தனியே இருக்க அதனை விட்டு விட்டு வேறு இடத்துக்குப் பறவையானது பறந்து போய்விடுதல் போலாகும். புதிய உரை: நீர்நிலைக்கு வருவதும் போவதும் தெரியாத அளவுக்கு, நீரைப் பயன்படுத்தி வெளியேறுகிற நீர்ப்பறவைபோல, உடம்போடு உயிர் கொண்டு இருக்கும் தொடர்பும் அமைந்து இருக்கிறது. விளக்கம்: கூட்டிலே வாழ்கிற பறவை, தேவைக்காக நீர்ப்பரப்பிற்கு வந்து, ஆவலைப் பூர்த்தி செய்து கொண்டபிறகு, அவசரப்படுவது போல, விரைவாய் ஓடிவிடும். நீரைப் பற்றியோ, அதன் சீரைப் பற்றியோ பறவைக்குக் கவலை இல்லை. தன்னிச்சையாக வருவதும், தன் தொழில் முடிந்ததும் அது வேறிடம் நோக்கிப் போய்விடுகிறது. அதுபோல, தாயின் கர்ப்பப் பையை நோக்கி ஆண் அனுப்புகிற விந்திலுள்ள அணுக்களானது. ( Ջ தாயின் கர்ப்பப்பையின் கருமுட்டையை நோக்கியே ஒடுகின்றன. அணுவும், முட்டையும் கூடிக்கலக்கிறபோது அங்கே அவாாகிய காற்றும் உள்ளே புகுந்து உயிர்ப்பு வேலையைச் செய்கிறது. ஆண்டு அவர் வந்ததால்தான் அந்தக் காற்குக்கு ஆண்டவர் என்று பெயர் வந்தது. H = == ■ 睡 o * - C - T, ... ~5 காற றாக ப புகுநது தன்னிச்சையாக வந்து தங்கிக் في ارياl, { || (5YY| || உயிரானது, தன்னிச்சையாகப் பறப்பதைத்தான் நீர்ப்பறவையும் செய்கிறது என்று வள்ளுவர் இந்தக்குறளில் குறிப்பிடுகின்ற пії.