பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: சினத்தின் கன்னே மிக்கார், உயிருடையார் ஆயினும் செத்தாரோடு ஒப்பர். சினத்தைத் துறந்தார், சாதல் தன்மை யராயினும் அதை ஒழிந்தார் அளவினர். தற்கால உரை: சினத்தின் அளவு கடந்தவர், உயிருடன் காணப்பட்டாலும், செத்தாரைப் போலவே கருதப்படுவார். சினத்தை அறவே துறந்தவர், துறந்தவர்களுக்கு ஒப்பாகக் கருதப்படுவர். புதிய உரை: கோபத்தால் நெறிகடந்த ஒருவன் உணர்வற்ற சவத்துக்கு ஒப்பானவனாகக் கருதப்படுகிறான். அத்தகைய ஆட்கொல்லி சினத்தை, வெறுத்துக் கைவிடுகிற ஒருவன் ஏற்கனவே சினத்தைக் கைவிட்டவருக்கு உதவுபவனாக உயர்த்தப்படுகிறான். விளக்கம்: கோபத்தை நினைக்க வேண்டாம். கோபத்தை மறக்க வேண்டும். கோபம் ஊட்டியவனை மன்னிக்க வேண்டும். கொடுமைகள் கூண்டிலே, குற்றவாளியாக கோபம் கொண்டுபோய் நிறுத்திவிடும். கொத்திக் கிழிக்கும் கழுகுபோல ஆத்மாவைக் குதறிக் கிழிக்கும் கதறி அழச் செய்யும். பதறி விழச் செய்யும். அப்படிப்பட்ட பொய் படகில், பூசல் புயலில், பயணம் போகிற ஒருவன் போய்ச்சேருகிற இடம், புதை சேறாகும், புதைகுழியாகவும் மாறிய பொய்காடாகவும் ஆகும். அதனால்தான் அப்படிப்பட்ட கோபக்காரனை, நெறிநீங்கிய நீசன், நினைவுகள் இழந்த சரீரன், அவன் இருப்பது சவம்போல. சிரிப்பது விஷம்போல. அவன் இருந்தும் இறந்தவனாகவே ஜீவிக் கிறான் என்று கூறிய வள்ளுவர், அத்தகைய அடங்காக் கோபத்தை, அகில உலக மகா எரிசக்தியை, அடக்கி, வெறுத்துக் கைவிடும் போது, அவன் அனைத்தையும் வென்ற ஆண் தகையாக மதித்து உயர்த்தப்படுகிறான். அவன் சினத்தை விரட்டிய மகாத்மாக்களுக்குத் தோன்றும் துணையாகவும், தோன்றாத் துணையாகவும் இருந்து உதவுகிறான். அவன் பேராண்மை, வரலாற்றுப் பெருமை பெறுகிறது என்று வெகுளாமையின் துட்பங்களை எல்லாம் வியந்து, வியந்து, வள்ளுவர் போற்றிப் பாராட்டுகின்றார்.