பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 243 சொல் விளக்கம்: அறன் = ஒழுக்கம், ஞானம், தகுதி; அறிவுடையார் = சான்றோர் திறன் = வரலாறு, குணம், வழி திரு = அழகு, செல்வம், மேன்மை, தெய்வத்தன்மை முற்கால உரை: பிறன் பொருளை இச்சிக்காத அறிவுடையாரை இலக்குமி சேருவாள். தற்கால உரை: அறநெறி அறிந்து பிறர் உடமையை விரும்பாத அறிவாளரிடம் அவர் தகுதியை அறிந்து அவரிடத்தில் செல்வம் தேடிச் சேரும் புதிய உரை: தகுதி நிறைந்த ஒழுக்கத்தினால், பிறர் உடமைகைகளைக் கவர்வதை வெறுக்கின்ற சான்றோரின் வரலாற்றைத் தெரிந்து கொண்டு, அழகும் செல்வமும் மேன்மையும் அவரிடம் தானாகவே சென்றடையும். விளக்கம்: பிறர் பொருளை, உடமைகளை இச்சிக்காத குணமும், ஞானமும், ஒழுக்கமான வாழ்க்கையையும் ஒருவர் பெற முடியாத பேறாகும். அப்படி வாழ்கிறவருக்கு ஒரு வரலாறே அமைந்து விடுகிறது. வரலாறு என்பது அவர் சென்ற நாட்களில் செய்து வந்த, காத்து வந்த ஒழுக்கமான வாழ்க்கை. இன்றைய நாட்களில் அவர் தொடர்ந்து பின்பற்றுகிற தூய பணிகள். அதற்காக அவர் கட்டிக் காக்கும் கட்டான தேகம். குறைகளற்ற மனம். இவ்வாறு வரலாறு படைக்கின்றன. வள்ளல் தன்மையில் வாழ்வாங்கு வாழ்கிற வாழ்க்கையில் எல்லாச் சிறப்புகளும் சென்று சேர்வதுதானே இயற்கை முறை. ஆமாம், அவரது உடலுக்கு அழுகு சேர்கிறது. இல்லறத்திற்கு செல்வம் சேர்கிறது. வாழ்க்கைக்கு மேன்மை சேர்கிறது. தினம் அவரது கடமைகளில் தெய்வத் தன்மை மிளிர்கிறது. திவ்யமான வாழ்க்கையை வெஃகா குணம் வழங்கிக் கெளரவிக்கிறது என்று 9 ஆம் குறளில் வள்ளுவர் பண்பாடிச் செல்கிறார்.