பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா H- o o விளக்கம்: ஒழுக்கம் என்பது உடல் ஒழுக்கம் மன ஒழுக்கம் ஆகும். சிற்றின்பம் என்பது புலன்களின் புடைப்பால் பிறக்கிற சிறு சிறு இன்பங்கள். அதனை தகாத இச்சை, அடங்காத வேட்கை, இழிகாமம் என்றே நல்லோர்கள் எண்ணுகிறார்கள். காமம் கண்ணை மறைக்கும். கருத்தை அழிக்கும். நீதி நியாயத்தை நெறிக்கும். தன்நிலைமையை மறைக்கும். ஆகவேதான், அதனைச் சிற்றி இன்பம் என்றனர். மற்றைய இன்பம் என்பது பேரின்பம். பேரானந்தம். உடலில் நோய் மற்றும் குறை இல்லாதபோது பெறும் சந்தோஷம். மனத்தில் குறை கவலை இல்லாதபோது பெறும் மகிழ்ச்சி. உடலுக்கும் மனத்துக்கும் உதவுகிற ஆத்மாவின் ஆனந்தம். அதுவே பேரானந்தம். இது தீமை செய்யாத, தீமையை நினைக்காத தூயவர்களுக்கே கிடைக்கின்ற பெருவாழ்வு. அப்படிப்பட்ட பெருவாழ்வைத் தொடர்ந்து, நிலைத்து வரும் ஆனந்தத்தை விரும்புபவர் ஒழுக்கத்திலிருந்து மாறமாட்டார். ஒழுக்க விதிகளை மீற மாட்டார். ஒழுக்கத்திற்கு மாறாக காரியம் செய்ய மாட்டார். ஒழுக்கமான வாழ்வே பேரின்பத்தை வழங்கும் என்று 3 வது குறளில் கூறுகிறார் வள்ளுவர். 174. இலம்என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற புன்மையில் காட்சி யவர் பொருள் விளக்கம்: புலம்வென்ற தமது ஐம்புலன்களையும் வென்ற புன்மையில் - அற்பமோ, சிறுமைத் தனமோ எதுவும் இல்லாத காட்சியவர் = அறிஞரானவர் இலம் என்று தமக்கு பேரின்பமானது கிடைக்கவில்லையே என்பதற்காக வெஃகுதல் செய்யார் = எல்லை கடந்த எந்த ஆசையையும் மேற்கொள்ள மாட்டார். சொல் விளக்கம்: புன்மை = அற்பம், சிறுமை, குற்றம்; காட்சியவர் அறிஞர் இலம் = வீடு, மோட்சம் முற்கால உரை: ஐம்புலன்களையும் வென்றவர். தாம் வறியோமென்று பிறர் பொருளை விரும்பார்.