பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை - 253 உள்ளும் = உள்ளதை திறன் தெரிந்து = மற்றவர்களும் அவனது பொல்லாத வரலாற்றை ஆராய்ந்து தெரிந்து கொண்டு கூறப்படும் = பேசுவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சொல் விளக்கம்: பழி - குற்றம், பொல்லாங்கு, அலர், இகழ், பழிதூற்றல் திறன் = வரலாறு, காரணம், குணம், கூறுபாடு தெரிந்து = ஆராய்ந்து முற்கால உரை: பிறன் ஒருவன் பழியை அவன் புறத்துக் கூறுபவன், தன் பழி பலவற்றுள்ளும் உளையும் திற முடையவற்றைத் தெரிந்து அவனாற் கூறப்படும். தற்கால உரை: ஒருவன் பிறர் மீது வீண்பழி ஒன்றினைக் கூறினால், அவன் மீது பல பேரும் பழிகளை வெளிப்படையாகவே கூறுவார்கள். புதிய உரை: மற்றவர் மேல் பெரிதாகப் பழி பேசி வருபவனுடைய வாழ்க்கையும் ஆராயப்பட்டு, அவனது வரலாறோடு கூடிய குற்றங்களை வெளிப்படுத்திவிடும் என்பதை உணர வேண்டும். விளக்கம்: குற்றம் செய்பவன் தான் மனிதன். (Man is err) என்பது பழமொழி. தானே விரும்பிச் செய்தல்; தன்மேல் குற்றம் சுமத்தப்படுதல்; சந்தரப்பச் சூழ்நிலையால் தவறுகளைச் செய்து விடுதல், என்பது போல ஒவ்வொரு மனிதனும் தவறுகள் இழைப்பவனாகவே இருக்கிறான். ஒருவனை நோக்கி, தன் சுட்டு விரலை நீட்டி, அவனது குற்றங்களைச் சுட்டிக் காட்டுகிறபோது, மற்ற மூன்று விரல்களும் தன்னை நோக்கிக் குறித்துக் காட்டுகின்றன. இதைய்ே கண்ணாடிக் கூண்டிற்குள் இருந்து கொண்டு மற்றவர்கள் மேல் கல்லெறியக் கூடாது என்றும் சொல்வார்கள். வள்ளுவர் இங்கே மக்களை எச்சரிக்க விரும்புவதெல்லாம் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது சரியானாலும், பழி தூற்றாதே! பொல்லாங்கு கூறாதே! அலர்தூற்றாதே, இகழாதே என்பதாகவே, எச்சரிக்கிறார். புறங்கூறல் பொல்லாதது என்று அறிவுறுத்த வருகிறார். உன் கண்ணில் உள்ள உத்தரத்தை நீக்காமல், பிறர்