பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/532

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 531 விளக்கம்: உடல் என்பது ஒன்பது வாசல்கள் கொண்ட ஒரு வீடு. அந்த வீட்டுக்கு உள்ள ஒன்பது வாயில்களும் அழிவுகளை ஏற்படுத்தும், கழிவுகளை அகற்றும் வகையில் அமைந்து இருக்கின்றன. எந்த நேரத்திலும், எந்தச் சமயத்திலும் கழிவுகளை நீக்கித் தூய்மையைச் சேர்ப்பதுதான், உடல் உறுப்புக்களின் உன்னதத் தொழிலாக அமைந்திருக்கிறது. மனிதன் சுவாசிக்கின்ற காற்று உடலுக்குள்ளே வந்ததும், அது பத்து விதக் காற்றுக்களாக மாறிப் பத்து விதப் பணிகளைச் செய்கின்றன. அவற்றின் பணிகளால்தான், உடல் செழிப்பும், கொழிப்பும் கொண்டு, தழைத்தோங்கி வாழ்கிறது. இந்தப் பத்துக்காற்றுக்களும் பறவை போல விரைவாகப் பறப்பதும், உள்ளே விரைவாகப் பிறப்பதும், இயற்கையின் இன்றியமையாத பணியாக இருந்து இயங்குவதால்தான். உடலிலுள்ள ஒன்பது ஒட்டைகளுக்கும் மூடிகள் இல்லை. அடைத்து வைக்கும் பூட்டாகவும் இல்லை. தடுத்து நிறுத்தும் தாழ்ப்பாளாகவும் இல்லை. இந்த மெய்நிலையை சிந்தித்தால், மேன்மை தரும் செயலாக ஒன்றே ஒன்று நமக்குத் தெரியும். அதுதான், மெய்யைப் பத்திரப்படுத்துவது. பாதுகாப்பது. பராமரிப்பது ஆகும். மெய்நிலையை, நிலையாமை என்று மாற்றி சொல்லி கேட்போர் நெகிழ்ந்து போய் உண்மையை உணரும் வண்ணம் நெக்குருகப் பாடுகிறார் வள்ளுவர்.