பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா o எங்கேயோ இருப்பதல்ல நரகம். இந்த நரகம், உடலுக்குள்ளே கூடுகட்டிக் கொண்டு, பாடுபடுத்திக் கொண்டிருக்கிறது. வெம்மைத் தீயைத்தான் நரகம் என்று அழைக்கின்றார்கள். உடலெங்கும் பரவுகிற பசி யெழுப்பும் வடவைத்தி, நச்சுத் தீண்டலாக அமையா வண்ணம், கஞ்சி கொடுத்துக் காப்பவன் காக்கும் கருணையாளனாகவே காட்சியளிக்கிறான். பண்பு மிக்க உதவியாளன், பாத்துண்ணும் அருஞ் செயல், பிறப்பிக்கும் எல்லா கொடுமைகளையும் திருப்பி அனுப்பி விட்டு, திருப்தியை அளித்து, தேற்றி, மனத்துக்கும் உடலுக்கும் சுகத்தையும் சொர்க்கத்தையும் அளிக்கிறது என்று இந்த ஏழாவது குறளில், கஞ்சிச் சோற்றின் பெருமையைப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார். 228. ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை வைத்திழக்கும் வன்கண வர். பொருள் விளக்கம்: ஈ (பிறர் துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள) கொடுப்பதை துவக்கும் - இன்றுதான் தொடங்குகிற ஆரம்பம் என்று இன்பம் - மகிழ்ச்சி கொள்வதையும், அதன் விளைவுகளையும் அறியார்சொல் = அறியாமல் பிதற்றுபவர்கள். தாம் உடைமை = தனக்குரிய பொருள் வளம் எல்லாவற்றையும் வைத்து இழக்கும் காத்திருந்து இழந்து வருந்துகின்ற வன்கண் அவர் - அவர், கொடிய மனிதராவார். சொல் விளக்கம்: ஈ கொடுத்தல்; துவக்கும் = தொடங்குகின்ற சொல் அலட்டுதல், பிதற்றுதல்; வன்கண் = கொடிய முற்கால உரை: தம்முடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளில்லாதார், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து, அவர் உவத்தலான அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ!