பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 437 சொல் விளக்கம்: புறம் = புறக்கொடை குன்றி குறைதல், தனை அளவு குன்றி = மனோசிலை எனும் கொடிய நஞ்சு மூக்கில் = ஒரு மருந்து; கரியார் - கீழ் மக்கள். முற்கால உரை: குன்றியின் புறம் போல, வேடத்தால் செம்மை உடையாராயினும் அதன் மூக்குபோல, மனம் இருண்டிருப்பாரை உடைத்து உலகம். தற்கால உரை: குன்றி மணியின் சிவந்த நிறத்தை வெளித் தோற்றத்தால் காட்டுவார் என்றாலும், குன்றி மணியின் மூக்கில் உள்ளது போன்ற கரிய உள்ளத்தை உடையவரையும் இவ்வுலகம் கொண்டுள்ளது. புதிய உரை: பொய் வேடத்தாலும் வஞ்சித்தும் கூட, புறக் கொடைகள் குறைந்து போவதைக் கண்ட போலியான ஆன்மாவே பொல்லாத நஞ்சாக மாறி, கீழ்மக்களை உடைத்து அழிக்கும் மருந்தாக மாறி விளக்கம்: 4 வது, 5 வது, 6 வது குறட்பாக்களில் கூறியபடி, தவம் மறைந்து அல்லவை செய்தும், பற்றற்றேம் என்று படிற் றொழுக்கம் புரிந்தும், துறந்தார்போல் வஞ்சித்தும், மக்களிடையே எல்லாம் பெற்று வாழ்கிற போலித் துறவிகளின் பொல்லா செயல்களை விவரித்தார் வள்ளுவர். அனைத்தையும் துறந்ததாகத் தோற்றமளித்தாலும், அன்பு, ஆசை, அறுசுவை உண்டி, செல்வம், சுகபோக வாழ்க்கை இவற்றிலிருந்து, விடுபட்டு வெளியேறிவர இயலாதவர்களுக்குத், தங்கள் வருமானம் குறைவதைக் காணுகிறபோது, என்ன நடக்கும் என்பதைத்தான் எட்டாவது குறளில் கூறுகிறார். புறம் குன்றி என்பது புறத்திலிருந்து வருகிற கொடை தனையர் என்பது அதன் அளவைக் காணுவர். அகம் என்பது, அவரது ஆன்மா. குன்றி என்பது மனோசிலை எனும் கொடிய நஞ்சு.