பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா முற்கால உரை: மனத்தைத் தன்வழிப்படுத்தும் வலியில்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன் வழிப்படுதல், பசுகாவலர் கடியாமல் புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு, பைங்கூழை மேய்ந்தாற் போலும். தற்கால உரை: தவ வலிமை இல்லாதவன், தவக் கோலங்களைக் கொண்டிருப்பது, வலிமையில்லாத ஆன், வலிய புலியின் தோலைப் போர்த்துக் கொண்டு, அயலார் பயிரை மேய்வது போன்று. புதிய உரை: தவ வலிமையும் உறுதியும் இழந்து குற்றமிழைக்கும் ஒருவன், தன் இருள் வேடத்தை மாற்றி, அருளாளராக அலைவது, எரு தொன்று புலித்தோல் போர்த்தி, தன்னைத் தகுதியாக்கிக் கொள்வது போலாகும். விளக்கம்: எருது ஒன்று, தனக்கொரு தகுதிவேண்டும் என்பதற்காக, புலித்தோலைப் போர்த்திக் கொண்டு புலிவேடம் போட்டுக் கொள்கிறது. பயிரை மேய வேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தாலும், பிறர் தம்மைக் கண்டு அஞ்ச வேண்டும். தூரத்தே நின்று தோற்றத்தைக் கண்டு மிரளவேண்டும் என்னும் தவறான ஆசை. அதனால்தான், வள்ளுவர் அவனை மையான் என்றார். இருள் மனம் கொண்டவன்; குற்றம் செய்வதில் நாட்டம் உள்ளவன், தவத்தின் பெருமையைக் குலைப்பதில், i. H கொள்வதில், முயல்கிறவன். திறமையானவன். ஆனால், மேலும் தன்னை மேம்படுத்திக் அவன் ஆசைகள், அவனை விரட்டுகின்றன; வெருட்டுகின்றன; வேட்கைகள் வெறியாகி, வேட்டை நாய்களாய் கவ்வுகின்றன. அதனால், இழி.குலச் சிந்தனைகளும், பழிபடு பாவங்களும் பெரிதும் விரும்பி ஏற்கின்ற ஒருவன் சடை, சிகை, பூணுல் பூண்டு, தவ வேடம் பூண்டால் என்ன பயன்? ஆக, தவப் புலிபோல் வேடம் ஏந்தி, தவம் செய்கின்ற அற்பர்கள், அவர்கள் மிருக மனிதர்கள். மிருகங்கள் செயலும்,