பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: தீய = குற்றம், கேடு வை = கூர்மை, வையகம் தீ = நகரம், அவை = கூட்டம் முற்கால உரை: தமக்கின்பம் பயத்தலைச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான், அத்தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும். தற்கால உரை: தீய செயல்கள், பிறர்க்கும் தமக்கும் ஒருங்கே தீமையையே தருவதால், அத்தீய செயல்கள், தீயைப் பார்க்கிலும் அஞ்சத்தக்கன. புதிய உரை: தீங்குகள் செய்கிற கீழோரின் உலகம், கேடுகளையே உண்டாக்கி விடுவதால், அக்கீழோர்களின் கூட்டமே, எரிக்கும் தீயை விட, அச்ச மூட்டும் அனல் களமாகிவிடுகிறது. விளக்கம்: மக்கள் வாழ்கிற உலகத்தை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். நல்லவர்கள் வாழ்கிற உலகம், தீயவர்கள் வாழ்கிற உலகம். இரண்டும் தனித்தனியே நிலவுகிற உலகமல்ல. இரண்டும் இரண்டறக் கலந்து, பின்னிப் பிணைந்து, ஒன்றாகத் தோன்றுகிற D–GR)35LD. பாலில் கலந்த தண்ணிர் வெண்மையாவது போல, நல்லோர் உலகத்தில் தீயோர் புகுந்து, கலந்து, கரைந்து கொள்கின்றனர். தீயோரின் கேடு பயக்கும் செயல்களால், அவர்கள் வெளிப்படும் போது தான், தீமை தெரிகின்றது. தீயாய்ச் சுடுகின்றது. தீயவர் வாழ்கிற உலகம், தீமைகளையே செய்கின்றன. ஆகவே, அந்தத் தீயவர் கூட்டம், எங்கு இருந்தாலும், அது சுட்டெரிக்கும் இழி கூட்டமாகவே நடந்து கொள்கிறது. இந்தக் கருத்தை, மிகவும் நுட்பமாகத் தீயவை என்னும் சொற்களால் சாமர்த்தியமாகக் கூறியிருக்கிறார். தீயவை என்கிறபோது, தீயவர்களது உலகம். அடுத்த தீ அவை என்கிறபோது, அங்கு வாழ்கிற தீயவர் கூட்டம்.