பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா Jos) விளக்கம்: உலகத்தின் மமதை என்பது, நிலையாமையை நிலைப் Iடுத்திக் காட்டுகின்ற ஒரு மலையாமை. மக்களை மாழ்வித்து தோற்கடிக்கிற வெற்றியைத்தான் மமதை என்கிறார் வள்ளுவர். சாவது திண்னம் என்கிற எண்ணம், சரித்திரமாய்த் தொடருவதைச் சகலரும் அறிவார்கள். சாவு வெற்றிபெற அவ்வளவு எளிதாக இடம் கொடுத்துவிடக் கூடாது. சாவானது ஒழுக்க வாழ்வு உள்ளவனிடம் சலசலப்புக் காட்டவே அஞ்சும். ஆகவே மெய் நிலையை, மேன்மை நிலையாக்கிக் கொள்ளுங்கள் என்று ஆறாம் குறளில் நீராய் உருகுகிறார் வள்ளுவர். 337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல பொருள் விளக்கம்: ஒருபொழுதும் = ஒரு காலத்தில் வாழ்வது = எப்படி வாழ்வது என்ற முறையை அறியார் = அறியாதவர்கள் பல அல்ல = பலவாறு சிந்தித்து சிதைகிறார்கள் கருதும் - சிந்தனை செய்தால் கோடி = மேன்மை மிக்க விஷயம் புரியும். சொல் விளக்கம்: י, רכס - ס: பொழுது = காலம்; வாழ்தல் ஜீவித்தல் கருதுப - சிந்தி, ஒத்திரு கோடி = இளமை, புதுமை, மேன்மை சேரும் விஷயம் முற்கால உரை: ஒரு பொழுதளவும், தம் உடம்பும் உயிரும் இயைந்து இருத்தலைத் தெளியமாட்டார். மாட்டாது வைத்தும் கோடியளவு மன்றி அதனினும் பலவாய நினைவுகளை, நினையா நிற்பர் அறிவிலாதார். தற்கால உரை: ஒரு சிறு பொழுது கூட வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறியமாட்டாதவர்கள், வீணாக எண்ணுவனவோ ஒரு கோடி அளவினதாக மட்டுமல்ல, அதற்கு மேலும் பல கோடி எண்ணங்களைக் கொண்டனவாக இருக்கும்.