பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 11 ] 71. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ் ஆர்வலர் புன்கணிர் பூசல் தரும் பொருள் விளக்கம்: அன்பிற்கும் = பிறரிடத்து காட்டுகிற அன்பினுக்கும் அடைக்கும் தாழ் = தடுத்து மாற்றுகிற தடுப்பானான தாழ்ப்பாள் உண்டோ= இருக்கிறதோ? (ஆமாம். இருக்கிறது. எப்படி?) பூசல் தரும் = போராடச் செய்கின்ற புன்கணிர் = துன்பம், வறுமை தருகிற நோயுடைய உடல் கொண்ட ஆர்வலர் - மனிதருக்கு (முடியாது) சொல் விளக்கம்: புன்கண் = தரித்திரம், துன்பம், நோய், அச்சம், பொலிவழிவு பூசல் = பொருதல், மலைதல்; ஆர்வலர் = அன்புடையர் முற்கால உரை: அன்பு கொள்ளப்பட்டவரது துன்பங்கண்ட போதே அன்புடையவர் கண்ணிரே, உள்ளிருந்த அன்பைக் காட்டும் என்பதாம். தற்கால உரை: ஒருவர் கொண்டுள்ள அன்பினைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்கும் மறைவு இல்லை. அன்பு செலுத்தத் தக்கவரைக் கண்ட அளவில் அவர் கண்ணில் துளிக்கும் கண்ணிரே அதை வெளிப்படுத்திவிடும். புதிய உரை: துன்பம், வறுமை தரும் நோயுடைய மனிதருக்குப் பிறரிடத்துக் காட்டுகிற அன்பினுக்கு தடுத்து நிறுத்தும் தாழ்ப்பாள் உண்டோ? தடுக்கிற தாழ்ப்பாள் உண்டு. விளக்கம்:

  • வாழ்க்கையில் துன்பம் வறுமை அச்சம் தரக்கூடிய நோய் கொண்ட நோயாளி ஒருவரால், யாரிடமும் அன்பு காட்ட முடியாது. நொந்து வாழும் நோயாளியால் எந்த மனிதரிடத்தும் அன்பு செய்யவே முடியாது. ஆகவேதான், அன்பிற்கும் அடைக்கும் தாழ் இருக்கிறதா என்று கேள்வியை எழுப்பி, இருக்கிறது என்னும் எதார்த்த நடைமுறை வாழ்க்கையைக் காட்டுகிறார்.

ஆர்வலர் என்பவர் தாம் விரும்புகிற பொருள்கள் மேல் பற்றுள்ளம் கொள்பவர். பற்றுள்ளம் இருந்தாலும் துன்புறுத்துகிற நோய் கொண்டவர்களால் அத்தகைய அன்பு உள்ளத்தைச் செலுத்தவே முடியாது.