பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை Ꮌ8 ] 378. துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின் பொருள் விளக்கம்: துறப்பார் - தீவினைகளை விடுபவரது மன் - பெருமை துப்புரவு - ஐம்பொறி நுகர்ச்சியால் முழுமைபெறுகிறது தீவினையால் உறற்பால - மனம்போல அனுபவிக்க முடியாமல் போகிறபோது இல்லார் = தரித்திரனாகிறான் ஊட்டா கழியும் = பகையுண்டாகி சொல் விளக்கம்: துறப்பார் = கைவிடுதல்; மன் - பெருமை துப்புரவு - ஐம்பொறி நுகர்ச்சி: இல்லார் தரித்திரன் ஊட்டல் = பகையுள்ளான் முற்கால உரை: வறுமையான் முயற்சி இல்லாதான் துறக்கும் கருக்கடையராவர். ஊழ்கள் ஒருதற்பாலவாய துன்பங்களை உருவியாது ஒழியுமாயின். தற்கால உரை: முறையும் சூழலும் உரியதைப் பெறத் தடையானால் பெறமுடியாதவர் ஆவார். புதிய உரை: தீவினையைத் துறந்தவன் பெருமையும், ஐம்பொறி நுகர்ச்சியின் பெருமையும் பெறுகிறான். தீவினையால் பயன்களை அனுபவிக்க முயற்சிக்கிறவன், மனம் பகையாகி அனுபவிக்க முடியாமல் தரித்திரனாகிறான். விளக்கம்: நல்லவர்களுக்கு எப்பொழுதும் நன்மையே விளையும். அவர் செய்யும் செயல்களில் நலமே நிறையும். வாழ்க்கை முழுதும் வற்றாத வளமை பொழியும். அவர் வாழ்கிற ஒவ்வொரு பொழுதையும் உல்லாசமாகக் களிக்கிறார். உற்சாகமாகச் சுகிக்கிறார். அவர் பெயருக்குப் பெருமையும், வாழ்வுக்கு மேன்மையும், நல்ல முழுமையும் கிடைப்பதால் அவர் வாழ்வுக்குச் சான்றாகத் திகழ்கிறார். தீமை செய்பவருக்கு, விளையும் பயன்கள் மியைாகவே இருக்கும். வாழ்க்கையில் வந்து சந்திப்பன எல்லாம் வினையாகவே