பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 523 முற்கால உரை: நாள் என்று அறுக்கப்படுவதொரு கால வரையறை போல. தன்னைக் காட்டி, ஈர்ந்து செல்கின்ற வ ாளினது வாயது உயிர். அஃது உணர்வாரைப் பெறின் தற்கால உரை: வாழ்க்கையில் உண்மை நிலையை ஆராய்ந்து அறியக் கூடிய அறிவுடையோர் ஒவ்வொரு நாளையும், உடம்பின் வாழ்வை அறுத்துக் குழைத்துக் கொண்டு வரும் வாள் என்று கருதுவார்கள். புதிய உரை: ஒவ்வொரு நாளும், வாழ்க்கை புதுமையையும், இளமையையும் தருவதால், அந்த மேன்மையை, ஆன்மா அறியும் ஒளியாக பின்பற்றுகிற பகுத்தறிவால், மேலும் பயன் பெறலாம். விளக்கம்: ஒவ்வொரு நாளும் தொடங்குவதை பிறப்பு என்பார்கள். இருளுக்குப்பின் நாள்வருவது பிறப்பு. ஒருவன் இரவு முழுவதும் உறங்கி விழித்து எழுவதும் பிறப்பு. பிறப்பு என்றால் பிரமிப்பு ஊட்டும் ஒரு பெரிய சம்பவம். வாழ்க்கையில் ஏற்படுகின்ற சம்பவம், ஒருவனது உடலுக்கு இளமையையும், மனதுக்கு எழுச்சியையும், அவன் பார்வைக்குப் புதுமையையும் வழங்குகின்ற சிறப்பால்தான், தினம், தினம் ஒருவனது வாழ்க்கை தேனாமிர்தமாக இனிக்கிறது. அப்படி எழுச்சியையும், மலர்ச்சியையும் ஊட்டுகின்ற, அன்றாட வாழ்க்கையின் ஆனந்தத்தை ஆன்மா அறிகிறபோது, அது ஆன்ம ஒளியாகப் பரவுகிறது. அந்தப் பேரொளியைப் பகுத்தறிவினால் மேலும் பெருக்கிக் கொள்கிறபோது, உடல் முதிர்ந்து சுருங்காது. மனம் அதிர்ந்து மயங்காது. ஆன்மாதுவண்டு அடங்காது. அதுதான் வாழ்க்கையின் சிறப்பு. அப்படித்தான் வாழ வேண்டும் என்று வள்ளுவர் வழிகாட்டுகிறார். 335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும் பொருள் விளக்கம்: நாச்செற்று வார்த்தை தடித்து விக்குள் - நிச்சயமாக கொடுமை நிகழ்வதற்குள்ளாக வாரா - வருத்துவதற்கு