பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.30 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தற்கால உரை: பொறாமை உடையவன் இடத்திலுள்ள செல்வமும், பொறாமை இல்லாதவனிடம் உள்ள செல்வமும் அறிய ஒழுங்குபடும். புதிய உரை: மனக்கோட்டமும், செருக்கும் உள்ளவன் பெற்றிருக்கிற அதிகாரமும் செல்வம் மிகுந்த வாழ்வும், நடுநிலைமை நேர்மையாளன் ஒருவனது அறிவும் பெறுகிற சிதைவும் இவற்றை எண்ணுகிறபோது அது மிகவும் கொடுமையானதாகவே தெரியும். விளக்கம்: அவ்விய, செவ்விய என்று இரண்டு சொற்களை இந்தக் குறளில் காண்கிறோம். மனத்தைப் பிடித்து ஆட்டுவது பொறாமை. மனதிற்கு மகுடம் சூட்டுவது நேர்மை. பொறாமைக்குக் கிடைப்பது கொடுமையான தண்டனை. நேர்மைக்குக் கிடைப்பது வாழ்வுக்கு வளமையும் வலிமையும். ஆனால் இந்தக் குறளில் எதுகடுமை, கொடுமை என்று வள்ளுவர் குறிக்கிறார். பொறாமை கொண்டவன் ஆக்கம் பெறுவதும், நேர்மை கொண்டவன் ஆக்கம் இழப்பதும், நேர்மை கொண்டவன் அழிவு பெறுவதும் இயற்கைக்குப் புறம்பானது தானே இயற்கைக்குப் புறம்பானதும் இவ்வுலகில் நடக்கும். அதற்காக நாம் மயங்கி, குழம்பி மாறிப் போய்விடக் கூடாது. மன உறுதியுடன் வருவதை எதிர் நோக்க வேண்டும். பொறாமை கொண்டவன் பெருக்கமும் நேர்மையாளன் இறக்கமும் நீடித்து நிலைப்பதல்ல. நீர்க்குமிழி போல மறைந்தொழியும் என்று மனத்துக்கு ஊக்கம் தரவே இந்தக் குறளைத் தந்திருக்கிறார் வள்ளுவர். 170. அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதில்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் பொருள் விளக்கம்: அழுக்கற்று மனத்தில் மாசும் களங்கமும் கொண்டு அகன்றாரும் - பரிபூரணமாக வாழ்ந்தவரும் இல்லை பெருக்கத்தின் மனம் மாசு கொண்டு பெற்ற வளர்ச்சியுடன் தீர்ந்தாரும் தைரியமானவர்களாக வாழ்ந்தவர்களும் இல்லை - உலகில் எங்குமே இல்லை என்பதே உண்மை