பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா

  • - - -

சொல் விளக்கம்: கேடு - அழிவு, சிதைவு, தீமை, வறுமை, குறைவு ஒருவன் = ஒப்பற்றவன்; வில் = விற்றல் கோள் - தீமை, இடையூறு, புறந்துாற்றல், கோட்பாடு தக்க = தகுதியான, தனதாக, பயன்படத் தகுந்த; துடைத்து நீக்கி, அழித்து. முற்கால உரை: ஒப்புரவு செய்தலான ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பருளராயின். அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும் தகுதியை உடைத்து. தற்கால உரை: பொது நலங் கருதிப் பாடுபடுவதால், ஒருவனுக்குக் கேடு உண்டாகுமானால், அக்கேடு தன்னை விற்றுக் கூட வாங்கிக் கொள்ளும் தகுதி உடையது. புதிய உரை: ஒப்பற்றத் தொண்டினால், பொறாமை கொண்டவர்கள் ஏற்படுத்துகிற அழிவையும் தீமைகளையும், ஒப்பற்றவனான ஒப்புரவாளன் அதற்கேற்ற காரியங்களைச் செய்து (விரட்டி) வெற்றி பெற்றுத் தன் தொண்டினைத் தொடருவான். விளக்கம்: ஒப்புரவின் வரும் கேடு என்பது, ஒப்பற்றத் தொண்டினால் உண்டாகின்ற புகழ் காரணமாகப், புழுக்கங் கொண்ட ஒழுக்கமற்ற பேர்கள், உண்டாக்குகின்ற கேடுகள். அத்தகைய கேடுகள் எல்லாம் ஒப்புரவாளரின் புகழை அழிக்கவும், பெயரைச் சிதைக்கவும், மதிப்பைக் குறைக்கவும், மானம் போவது போலப் புறந்துற்றவும் செய்கிற சிறுமைத் தனங்களே. அதனால் ஒருவன் என்றார். அதாவது ஒப்பற்றவன், உயர்ந்தவன், உறுதியானவன், உண்மையானவன்.