பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 3.11 சொல் விளக்கம்: நயன் - இன்பம், உறவு, இரக்கம், கொடையாளி கண் = உடம்பு, அறிவு, ஞானம், அகக்கண், புறக்கண் செல்வம் = வாழ்க்கை முற்கால உரை: செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற் போலும். தற்கால உரை: ஊரின் நடுவே இருக்கும் பழுத்த நல்ல மரம், எல்லா மக்களுக்கும் பயன்படுவது போல, ஒப்புரவு உடையான் செல்வமும் எல்லோர்க்கும் பயன்படும். புதிய உரை: இனிய பழங்களைத் தந்து, உள்ளுர் மரம் எல்லோர்க்கும் உதவுவதுபோல, இரக்கம் மிகுந்த கொடையாளியின் வாழ்க்கையும், யாவர்க்கும் நற்கொடையாக அமைந்து காக்கிறது. விளக்கம்: ஊர் நடுவே பழுத்த மரம் இருக்கிறது. இனிமையான கனிகளைக் கொடுப்பதால்தான், எல்லோரும் விரும்புகின்றனர். பயன்படுகிற காரணத்தால்தான், மரமும் மதிக்கப்படுகிறது. பழங்களும் பறிக்கப்பட்டு, சுவைக்கப்படுகிறது. போற்றப்படுகிறது. பறிப்பாருக்கும் சுவைப் பாருக்கும் பெருமகிழ்வூட்டுகிற பழுத்த மரம் போல, நயனுடையான் செல்வம் இருக்கிறது. நயனுடையான் என்றதும், இரக்கப்படுகிறவன், ஈர நெஞ்சுடன் உறவு பாராட்டுகின்றவன், கொடைதந்து சீராட்டுகின்றவன் என்னும் குறிப்பை முதலில் காட்டுகின்ற வள்ளுவர், செல்வம் என்றார். செல்வம் என்றால் இன்பம், கல்வி, சீர், செழிப்பு, அழகு, ஆக்கம், நுகர்ச்சி என்று பொருள் கிடைப்பதால், இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக வாழ்க்கை என்று அமைந்து விடுகின்றன. எல்லா பண்புகளுக்கும் உறைவிடமானது வாழ்க்கை. வாழ்க்கை என்னும் சொல், இவ்வளவு பண்புகளையும் குறிக்காது என்பதால்தான், செல்வம் என்று சிறப்பாகச் சொன்னார்.