பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 389 சொல் விளக்கம்: படை = தூக்கம், படுக்கை, சேனை போல் = புதர், பொந்து, மலைக்குகை நன்று =சுகம், இன்பம்; மனம் = உள்ளம், அகம், நெஞ்சம் ஊக்குதல் = எழுப்பல், உற்சாகப்படுத்துதல், சிந்தித்தல், கற்பித்தல்; சுவை = இனிமை, நாவின் உணர்வு, ஆசை முற்கால உரை: கொலைக் கருவியைத் தம் கையில் கொண்டவர் மனம், அதனால் செய்யும் கொலையையே போக்குவது அல்லாது, அருளைப் போக்காததுபோல, பிறிதோருடலைச் சுவை பட உண்டவர் மனம் அவ்வூனையே போக்குவதல்லாது, அருளைப் போக்காது. தற்கால உரை: கொலைக் கருவியைக் கையில் கொண்டவர் மனம், அருளென்னும் நல்ல தன்மையைக்கருதாது. அதுபோல, ஒன்றன் உடலைச சுவைதது, உண்டவா மனமும அநநலலதனைக கருதாது. புதிய உரை: ஊனைச் சுவைத்து, மனம் போல உண்டவர் மனம், தூக்கமே சுகம் என்று தான் கொள்ளும். அந்த மனத்திலே எந்த எழுப்புதலும் முயற்சியும் இருக்காது. கற்பதும் சிந்திப்பதும். உற்சாகமும் போன்ற எல்லாமே இல்லாது போய் விடுகிறது. விளக்கம்: கறி உணவு சாப்பிடுவோர் மனத்திலே களிப்புத் துள்ளும். வயிறு நிறைவது கூடத் தெரியாமல் வாரித் தின்னச் சொல்லும். இந்தச் சுவைக்கு ஈடில்லை என்று எண்ணுகிறது உண்பவர் மனம் என்கிறார் வள்ளுவர். 'உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு என்பது பழமொழி. தொண்டர் என்றால் அடிமைகள். உலகப் பற்றில் ஈடுபட்டவர்கள் என்று அர்த்தம். ஆக, ஊன்கறி உணவை உண்டவர்கள், மனம் நிறைந்துபோன வயிற்றைத் தடவி நிம்மதி பெறுகிறது.