பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 349 கேடும் உள - அழிவை உண்டாக்கும் கேடுகள் உண்டு சாக்காடும் = மரணத்தை உண்டாக்கும் கொடியகாடும் ஆகும் - அப்படித்தான் அழிவை உண்டாக்கும் அந்த அழிவு தரும் . காட்டையும்; கல்லால் = கல்லால் ஆன ஆலமரம்போல வித்தகர்அரிது - ஆக்கிக் கொள்கின்ற சாதூரியம் ஆற்றலாளர்களுக்கு உண்டு. சொல் விளக்கம்: நத்தம் = இரவு, இருள்; போல் = புதர், மூங்கில் சாகாடு = மரணம் உண்டாக்கும் காடு; வித்திகர் = சாதுரியர், அறிஞர் கல்லால் = கல் ஆலமரம்; அரிது - அருமை. முற்கால உரை: திறமை உடையவர்க்கு புகழுடம்பிற்கு பெருக்கமாகும் வறுமையும் இல்லை. அது போல, அப்புகழுடம் பு நிலைபெறுவதாகும் மரணமும் இல்லை. தற்கால உரை: சங்கைச் சுடச் சுட வெண்மை பளிச்சிடல் போல் புகழ் வளர வரும் வறுமையும், புகழ் நிலை பெற உண்டாகும் இறப்பும், வாழ்வியல் திறம் மிக்கோர்க்கு அல்லாமல், பிறருக்கு வாய்த்தல் இல்லை. புதிய உரை: இருள் சூழ்ந்த இரவில் மூங்கில் புதர், கேட்டினை உண்டாக்குவதுபோல, மரணம் ஏற்படுத்தும் அடர்ந்த காட்டையும், வல்லமை உடையவர்கள், கல் ஆலமரம் போல் மாற்றிப் புகழ் பெறுவார்கள். விளக்கம்: புகழ்ச்சி என்றதும் இகழ்ச்சி என்னும் எதிர்ச்சொல் வருவதுபோல, புகழில் வளர்ச்சி என்றதும் தளர்ச்சியும் அழிவும் நினவுக்கு வரும். இங்கே வள்ளுவர் இரண்டு கேடுகளைச் சம்பவிக்கும் இடங்களைக் காட்டுகிறார். காரிருள் சூழ்ந்த பகுதி, மூங்கில் புதர். அங்கே நுழைபவர் கதி அதோகதிதானே! இன்னொருகாடு பெருங்காடு, மரணத்தை உண்டாக்கும் மகா கொடிய காடு. இதினுள் சென்றவர்க்கு சாவுதான் முடிவு.