பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 133 10. இனியவை கூறல் தெரிந்த சுற்றத்தாருக்கு, தெரியாத புதியவர்களுக்குத் தெம்பூட்டுகிற உணவு படைக்கும் விருந்தோம்பலில், அவர்களது உணர்வுகளையும் மகிழ் விக்கும் முறைகள் பற்றி வள்ளுவர் நுண்மையாகக் கூறினார். அவ்வாறு முயல்கிற உணர்வுகளை மகிழ்விக்கும் புற விருந்து முறைக்குத்தான் இனியவை கூறல் என்று கூறி இந்த அதிகாரத்தை அடுத்ததாகத் தந்துள்ளார். மனதிலுள்ள மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிற இனிய சொற்களைச் சொல்லுதல் என்று, இனியவை கூறலுக்குப் பலர் பொருள் கூறுவார்கள். உள்ளத்தின் கண்ணே உவகையை வெளிப்படுத்துவனவாகிய இனிய சொற்களைச் சொல்லுதல் என்றும், சிலர் பொருள் கூறுவார்கள். இனியவை கூறல் எனும் அதிகாரம் எழுந்தமைக்குரிய காரணத்தை வள்ளுவர், தனது அதிகாரச் சொற்களாலேயே அற்புதமாக விளக்கியிருக்கிறார். இனியவன் என்பவன், தானும் மகிழ்ச்சி யுடையவனாக இருக்கிறான். பிறரையும் மகிழ் விப்பவனாக இருக்கிறான். அப்படிப்பட்ட பண்புகள் உடைய அறன் கூறும் சொற்கள் எப்படியெல்லாம் இருக்கும், இருக்க வேண்டும் என்பனவற்றை நினைவுபடுத்தவே, நினைவுக்குள் உட்படுத்தவே இனியவை கூறல் எனும் அதிகாரத்தை விருந்தோம்பலின் பின் வைத்துள்ளார். தன் மகிழ்ச்சியைப் பிறரிடம் கூறி மகிழ் விக்கும் சொல்லைவிட, தான் கூறுகிற சொல், மற்றவர்க்கு மகிழ்ச்சியை உண்டாக்க வேண்டும் என்பதுதான், இனிய சொல்லின் இலக்கணம் என்று தொடங்குகிறார் வள்ளுவர்.