பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 229 விளக்கம்: பொறாமை என்பது ஒரு தீவினை. தீயானது தானும் எரிந்து, தான் இருக்கும் இடத்தையும், சார்ந்த பொருளையும் எரிக்க வல்லது. அது போலவே, பொறாமை கொண்டவனது மனத்தில் பற்றிய தீயானது, அவனது அக அழகையும், முக அழகையும் எரித்துக் கருக்கிவிடுகிறது. அழகு குறையக் குறைய ஆற்றல் குறைகிறது. சிறப்பு மறைகிறது. பெருமை குலைகிறது. பேரறிவு மாய்கிறது. வாழ்வே தேய்கிறது. அப்படியே அன்றிலிருந்து அவன் வாழும் காலம் வரையிலும் குறைபட்டவனாக, கறைபட்டவனாக, நிறை கெட்டவனாக, நெஞ்சில் அமைதி விட்டவனாக, நேர்மையில் பட்டவனாக அவதிப்படுகிறான். அனுதினமும் கெடுகிறான். எனவேதான் பொறாமையைப் பாவி என்றார். தீவினை என்றார். தீயகமான தேகம் தானாக நரகமாகி விடுகிறது என்று 8வது குறளில் வள்ளுவர் பொறாமையின் கொடுமையைப் படம் பிடித்துக் காட்டுகிறார். 169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். பொருள் விளக்கம் : அவ்விய = மனக்கோட்டம் உடைய நெஞ்சத்தான் = செருக்கு உள்ளவன் ஆக்கமும் = பெருக்கம் மிகுந்த வாழ்வையும் செவ்வியான் = நேர்மையும் நடுநிலைமையும் உடையவனது கேடும் = அழிவும், சிதைவையும் நினைக்க - சிந்தித்துப் பார்க்கிறபோது படும் = கடுமையாகவே உணரப்படும் சொல் விளக்கம்: ஆக்கம் = பெருக்கம்; வாழ்வு = எழுச்சி, அதிகாரம், செல்வம் அவ்விய = மனக்கோட்டம் உடைய செவ்வியான் = நேர்மையும், நடுநிலைமையும் உடையவன் கேடு - அழிவு, சிதைவு, அழிவு இன்மை; பகு= கொடுமை. முற்கால உரை: பொறாமை உடையவன் செல்வமும் பொறாமை அற்றவன் வறுமையும் பழைய வினை எனப்படும்.