பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: அன்மை = தீமை, அல்லாமை; புண்மை - அற்பம், குற்றம், இழிவு, ஈனம்; படும் = கொடுமை, பேரறிவு முற்கால உரை: தருமம் நன்றென்பவன் மனதிலே தருமம் இல்லாமையால், புறங் கூறுதலால் அவன் தன்மை அறியப்படும். தற்கால உரை: ஒருவனின் புறங்கூறும் இழிந்த பண்பிலிருந்து அவன் அறச் சிந்தனை உடையவன் அல்லன் என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம். புதிய உரை: அறநெறி பேசுகிறவன் சிந்தையில் விளைகின்ற தீமைப் பண்புகள் எல்லாம், அவன் புறங்கூறிப் பேசுகிற இழிவான தன்மையால், கொடுமைகள் விளைவதை எல்லோராலும் எளிதாக அறியப்படும். விளக்கம்: உடலின் புலன்கள் உணர்கின்றன. உற்ற உணர்வுகள் உள்ளுக்குள்ளே பரவி, அறிவாகின்றன. அறிவுச் செறிவுகள் அகத்தை பதமாக நிரப்பி விடுகின்றன. நிரம்பிய அகம், எப்படிப்பட்ட நினைவுகளில் நின்று துலங்குகிறது என்பது, ஒருவனது பேச்சால் மட்டும் தெரிந்து கொள்ள முடிவதில்லை. அவன் செய்கின்ற செயல்களில் அவனை அறியாமல் வெளிப்பட்டு, அவனது உண்மைத் தன்மையை, உலகுக்குக் காட்டி விடுகின்றன. அன்மை என்றால் தீமை. சொல்லால் ஏற்படுகிற தீமைப் பயன்கள் புன்மை என்றால் இழிவு, ஈனம் அவனது செயலில் தெரிகின்ற இழிவும், ஈனமும், குற்றமும், அவனை அறியாமல் வெளிப்படுவதைத்தான் வள்ளுவர் புன்மையாற் காணப்படும் என்றார். 186. பிறன்பழி கூறுவான் தன்பழி உள்ளும் திறன் தெரிந்து கூறப்படும் பொருள் விளக்கம்: பிறன்பழி மற்றவர்மேல் குற்றம் சுமத்தி கூறுவான் - பெரிதாகப் பேசுபவன் -) தன்பழி தன்மேலும் (தான் செய்த) குற்றம், தீவினை போன்றவை - -